பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 * LDITಶಿ) பூண்ட மலர்

இயல்புகளை அடைவார்கள். ஒரு குறிப்பிட்ட பழக்கம் மேற்கொள்வதற்கு அரியதுபோலத் தோன்றலாம். ஆனல் அந்தப் பழக்கத்தை உடையவர்களிடையே நெருங்கிப் பழகினல் அது எளிதில் வந்துவிடும். .

விடியற்காலையில் எழுவதற்குச் சோம்புகிருன் ஒருவன். அவன் தன் வீட்டில் இருக்கும்போது காலையில் எட்டு மணிக்குத்தான் எழுவான். அந்த வீட்டிலுள்ள யாவருமே நேரம் கழித்து எழுபவர்கள். அவன் என்னதான் விடியற் காலையில் எழவேண்டுமென்று விரும்பினுலும் சூழ்நிலை அவனுக்கு எதிராக இருப்பதனால் அவல்ை எழமுடியாது. அசாதாரணமான மனே பலம் உடையவனாக இருந்தால் தான் சூழ்நிலைக்கு எதிர் நின்று வெல்லமுடியும். -

அவன் வேறு ஒர் ஊருக்குப்போய் வாழத் தலைப்படு கிருன். ஒரு குழுவோடு வாழும்படி நேர்கிறது. பத்துப் பதினைந்து பேர் வாழும் ஓரிடத்தில் அவன் தங்கியிருக்கிருன். அத்தனை பேரும் விடியற்காலையில் எழுந்து நீராடி ஜபம் செய்து பிறகு பஜனை செய்கிரு.ர்கள். எல்லாம் ஏழுமணக் குள் முடிந்து விடுகின்றன.

முதலில் தன்னுடைய தூக்கத்துக்கு இவைகளெல்லாம் தடையாக இருக்கின்றன என்று எண்ணி அவன் முணு முனுப்பான். மிகவும் ஆழமான உறக்கத்தில் அவன் விடியற்காலத்தில் இன்பம் காணுகிறவன். சில நாட்களில், எல்லாரும் விழித்துக்கொண்டு தம் , தம் வேலையைப் பார்க்கும்போது, நாம் மட்டும் படுக்கையை விரித்துப் படுத்துக் கிடப்பது நாகரிகம் அன்று என்று தோன்றும். எங்கேயாவது மூலையில் சென்று படுப்பான். அங்கும் தூக்கம் வராது. எழுந்து உட்கார்ந்து கொள்வான். பிறகு பல் தேய்த்துக் கொண்டுவந்து படுக்கையில் அமர்வான். இப்படியே அவ்னுள்ளே அங்கிருக்கும் சூழ்நிலை புகுந்து வேலை செய்யத் தொடங்கும். கடைசியில் அவனும்