பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு 121

மற்றவர்களைப்போல் விடியற்காலையில் எழுவதும், நீராடு வதும், ஜபம் செய்வதும், பஜனை செய்வதுமாகியவற்றைச் செய்வான். அவற்றைச் செய்வதில் அவனுக்குச் சிறிதும் சிரமமே இராது. அவற்றைச் செய்யாமல் இருந்தால்தான். மிகவும் தொல்லையாக இருக்கும். காற்று வீசும் போக்கிலே இலேசான பொருள் பறப்பது போலவும், நீரோட்டத் தினூடே கட்டை மிதத்து செல்வது போலவும் அவனுடைய போக்கு மாறிவிடும். - - -

இது சூழ்நிலையில்ை உண்டாகும் மாற்றம்: இனத்தில்ை ஏற்படும் இயக்கம். - .

இறைவியினிடம் நமக்கு அன்பு உண்டாகவேண்டும்; அன்னேயின் திருநாமத்தை அடிக்கடி கூறவேண்டும்; அப்பெருமாட்டியின் புகழைச் சொல்லவேண்டும்; அவளைப் பணிந்து வணங்கவேண்டும்; தியானிக்கவேண்டும். இப்படிச் செய்தால் நன்மை உண்டு. இது அநேகமாக யாவருக்குமே - தெரிந்ததுதான். ஆளுல் இவ்வாறு செய்வது என்பதுதான் அரிதாக இருக்கிறது. மனிதனுக்கு அறிவு இருப்பதனால், இவ்வாறு செய்தல் நல்லது என்று தெரிகிறது. இவ்வாறு செய்கிறவர்களைப் போற்றி வாழ்த்தவும் தயாராக இருக்கிருன். ஆனல் தான் அப்படிச் செய்ய முனைவ தென்பதுதான் எளிதாக இல்லை. . - }

அப்போது அவன் என்ன செய்யவேண்டும்? அந்த நல்ல செயல்களைச் செய்பவர்கள் சங்கத்தில் சேர்ந்து கொண்டால், அவன் எதை நல்லதென்று இதுவரையில் நினைத்து வந்தானே அதைச் செய்கையிலும் காட்ட முற்படுவான். சங்கம் அல்லது. சார்பினல் உண்டாகும் நன்மை இது. அதல்ைதான் பெரியவர்கள் நல்லோர் இணக்கம் வேண்டும் என்று அடிக்கடி சொல்கிருர்கள். "சான்ருேர் இனத்திரு' என்று. ஒளவைப்பாட்டி போதித்தாள். -