பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மாலை பூண்ட மலர்

பெருங்கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்டவன், தானுக நடக்க முயலாவிட்டாலும் அந்தக் கூட்டமே அவனத். தள்ளிக்கொண்டு போய்விடும். இது எப்படி உடம்பைப் பொறுத்தவரையில் உண்மையோ, அப்படியே நல்ல எண்ணங்களை உடையவர்களின் கூட்டத்தில் சார்ந்தால் தம் மனத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றும். -

அடியார்களின் நடுவில் இருந்து நலம் பெறுவது எல்லாருக்கும் கிடைக்கும் பேறு அன்று. அதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவன் திருவருளால் சத்சங்கத்தில் சேரும் வாய்ப்புக் கிடைக்கும். "அன்பர் களுடன் கூடி அவர்களுக்குப் பணி செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்துவிட்டால் போதும். நான் மோட் சத்தைத் தேடிக் கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை. அதுவே என்னைத் தேடிக்கொண்டு வந்துவிடும்' என்று தாயுமானவர் பாடுகிரு.ர். . . . . . -

"அன்பர்பணி செய்யான "ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந் தெய்தும் பராபரமே!'

மாணிக்கவாசகரும் இப்படிச் சொல்கிருர். உன் னிடையே அம்பிகை இருக்கிருள். அவளுடே நீ இருக்கிருய், நீங்கள் இருவரும் என் உள்ளத்தே எழுந்தருள வேண்டும். நான் தனியாக இருந்தால் அந்தப் பேறு எனக்குக் கிடைக் காது. நான் அடியார்கள் நடுவுள் இருந்தால் நீங்கள் என்னுள் இருப்பீர்கள். ஆகவே அடியேன் உன் அடியார் நடுவில் இருக்கின்ற அருளே வழங்கவேண்டும்' என்று இறைவனை வேண்டுகிரு.ர். . . . - -

உடையாள் உன்றன் நடுஇருக்கும்: உடையாள் நடுவுள் நீ இருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும்

இருப்பதானல், அடியேன் உன்