பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - மாலை பூண்ட மலர்

அடைந்து இங்கே வந்து நம்மைத் தம்முடைய அடியார் களிடையே இருக்கும்படி செய்து, நம் தலைமேலே தம் திருவடித் தாமரைகளைப் பதிப்பதற்குத் தக்கபடி நல்ல புண்ணியச் செயல்களை முன்பே செய்திருக்கிருேம். என்ன வியப்பு! -

குவளை - நீலோற்பலம்; குவளைக் கண்ணி கூறன் காண்க' (திருவாசகம்). செய்ய கணவர்: பவளம் போல் ம்ேனியில் (தேவாரம்); சிவனெனு நாமம் தனக்கே உடையசெம் மேனிஎம்மான் (தேவாரம்). நம் காரணத் தால்-நம் பொருட்டாக, மனத்தையும் உளப்படுத்திக் கூறுவதல்ை பன்மையாகச் சொன்னர்; முன்னிலையையும் உளப்படுத்திய உளப்பாட்டுப்பன்மை.) - -

அன்னையையும் அப்பனையும் தியானிக்கும் அநுபவம் உடையராதலின், அந்த இரகசியத்தை அறிந்த மனத்துடன் உரையாடுகிறர். - அடியார்களுடன் ஒன்றும் கூட்டுறவு இறைவன் திருவருளால் அமைவது என்றும், அதன் பயனுக இறைவ னுடைய அருளநுபவம் கைவரும் என்றும் இப்பாட்டால் அறியலாம். இறைவன் திருவருள் ஏதுவாக நின்று சத்சங் கத்தைக் கூட்டுவிக்கும். சத்சங்கம் ஏதுவாக நின்று அநுபூதியைக் கூட்டுவிக்கும். . -

இது, அபிராமி அந்தாதியில் 41-ஆம் பாட்டு.