பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 8 iera பூண்ட மலர்

காட்சிக்குரிய பொருள் குழந்தையாக இருப்பதனால் விளையும் விளைவு. -

காணும் கண்கள் குழந்தையின் கண்களாக இருந்தால் பருவம் நிறைந்த மங்கையையும் விகாரமின்றிப் பார்க்கும் நிலை வரும். மிகச் சின்னஞ் சிறிய குழந்தை தன்னுடைய தாய் ஆடையின்றி நீராடும்போது பார்த்தால் அதற்கு எந்த விதமான விகார உணர்ச்சியும் தோன்றுவதில்லை. தன் னுடைய தாயின் திருவுருவத்தை ஆர்வமுடனும் அன்புட னும் கவனித்தாலும் அந்தக் குழந்தையின் மனத்தில் இம்மி யளவும் வேறுபட்ட எண்ணமே எழாது. - -

இத்தகைய குழந்தையின் நிலையில் இருக்கிருர் அபிராமிபட்டர், அறிவிலே சிறந்து நின்ருலும் அம்பிகையை எண்ணும்போது குழந்தை ஆகிவிடுகிரு.ர். -

மங்கையரின் அவயவங்களில் ஆடவரின் மனத்தைக் கவருவன இரண்டு. இரகசிய ஸ்தானமும், நகில்களுமாகிய இரண்டும் ஆடவர்களின் மனத்தில் காமவிகாரத்தை ஊட்டுவன. அதல்ை அந்த இரண்டையும் மறைப்பது நாகரிகம் என்று எண்ணுகின்றனர், ஆளுல் விவேகிகளுக்கு அவை மயலே உண்டுபண்ணுவதில்லை. காணும் மங்கை .யைத் தாயாக உள்ளத்தில் எண்ணினல், எவை காமத்தை உண்டாக்குகின்றனவோ அவையே தாய்த்தன்மையின் அடையாளங்களாக இருப்பதை உணரமுடியும். உலகில் விலங்கினங்களிடமும் இந்த அங்கங்கள் இருக்கின்றன. குழந்தையைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமாக அமைந் தவை அவை. ஆதலின் விலங்கினங்களும் அவற்றைப் பெற்றிருக்கின்றன. நாம் பிறந்த இடமும், நம்மை வளர்க் கப் பால் கறந்த இடமும் அவை என்று எண்ணினல் இரண்டும் தாய்த் தன்மையை நினைப்பூட்டுகின்றன் அல்லவா? . . " - - - -

'பிறந்திடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்'