பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடம் கொண்ட நாயகி - 131

1பரந்த இடத்தைக் கொண்டு, பருத்து ஒன்ருேடு ஒன்று ஒக்க வளர்ந்து, தளர்ச்சியின்றிச் செறிந்து, மெத் தெனக் குழைந்து முத்து மாலையைக் அணியாகக் கொண்ட தனம் என்னும் மலையைக் கொண்டு சிவபிரானது வன்மை பெற்ற நெஞ்சைத் தான் நினைத்தவாறு எல்லாம் ஆட்டி வைக்கும் விரதத்தையும் அதற்கு ஏற்ற அழகையும் உடைய தேவி. . • , - -

இணைகொண்டு - இரண்டும் ஒ த் து அமைந்து, கொள்கை - விரதம், பதிவிரதம். நலம் - அழகு.)

அம்பிகையின் திருமார்பில் முத்துமாலை விளங்குவதைப் * திருத்தன பாரமும் ஆரமும்’ என்றும், மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை' (9, 37) என்றும் முன்பு குறிப்பிட்டார். சிவபெருமான் அம்பிகையின் தனம் கண்டு

வசப்படுவதை. . - - -

"அத்தர் சித்தமெல்லாம்,

குழைக்கும் களபக் குவிமுலே யாமளேக் கோமளமே” (33)

என்பதிலும் ச்ொன்னர்.

எம்பெருமாட்டியின் கடிதடம் அரவின் படம்போல அமைந்திருக்கிறது. அந்தப் பெருமாட்டியின் மொழி மிக மிகக் குளிர்ச்சியாக இருக்கிறது. கேட்டோருடைய காது வழியே சென்று உள்ளத்தில் இனிதாகப் பொருள் தரும் மொழிகள் அவை. ஒலியால் செவிக்கும் பொருளால் கருத்துக்கும் குளிர்ச்சியாக இருப்பவை. - - அம்பிகையின் திருவடியில் வேதமே சிலம்பாக அமைந் திருக்கிறது. எம்பெருமாட்டி நடந்தால் அந்த வேதம் ஒலிக்கும். அம்பிகை செயலற்று இருந்தால் வேதமும் ஒலியின்றி அடங்கிக் கிடக்கும். அப்பெருமாட்டியின் அருள் விளையாடலினல் வேதங்கள் ஒலி சிறந்து நின்று பயன் தருகின்றன. - - -