பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவர் பாகத்தில் இருந்தவள்

சிவபெருமானுடைய மனத்தை மயக்கும் பேரழகு. உடைய அம்பிகையின் அங்க நலங்களைச் சொல்லி, அவளு டைய திருவடிமேல் கிடந்து அலம்பும் வேதச் சிலம்பினைக் கூறிமுடித்தார் முற்பாட்டில். இப்போது தொடர்ந்து அந்தச் சிலம்பை அணிந்த பாதத்தைத் தொட்டுக்கொண்டு அன்னையின் திருக்கரங்களையும், சிந்துர ம்ேனியையும் உள்ளத்தில் வைத்துத் தியானம் செய்து, சொல்லினல் கோலம் செய்யப் புகுகிருர் அபிராமி பட்டர்.

எம்பெருமாட்டியின் திருவடி சிறியது. ஆதார வஸ்து வாக இருக்கிற உருவம் நுட்பமாக இருக்கும். சிலம்பு அணிந்த திருவடியை மட்டும் நினைத்துப் பார்க்கிருர் அபிராமிபட்டர். தேவி அடியார்களுக்கு அருள் செய்யத் தன் சிறிய அடியை மெத்தென வைத்து வருகிருள். அவள் எழுந்தருளுவதை அவள் நடக்கும் நடை காட்டாது. மென்மையாக நடக்கும் இயல்பினள் ஆதலின் அவள் வருகையை அடியின் ஒலி புலப்படுத்தாது. அவள் எங்கே நடந்தாலும் அதிர நடக்கமாட்டாள். ஆதலின் அவள் வருகையைப் புலப்படுத்துவதற்கு அவள் திருவடியில் உள்ள சிலம்புகள் பயன்படுகின்றன. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்றபடி, அன்னை. திருவடி எடுத்து நடந்து வருகிருள் என்பதை அவள் திருவடியைச் சூழ்ந்திருக்கும் சிலம்பு ஒவித்துக் காட்டுகிறது. வேதம் தன் மந்திரங்களால் அம்பிகையின் தத்துவங்களை எடுத்துச் சொல்வதுபோல் அந்தச் சிலம்பு எம்பெருமாட்டி யின் வருகையைச் சொல்கிறது. வேதமும் சிலம்பும் ஒன்று தானே? - -