பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவர் பாகத்தில் இருந்தவள் 135 .

அம்பிகை தன்னுடைய சிறிய அடியைப் பெயர்த்துச் சிலம்பு ஒலிக்க வந்து நின்று அருள் செய்யப் புகும்போது, அந்தப் பெரு மாட்டியின் திருக்கரங்களைப் பக்தன் பார்க் கிருன். ஒரு கரத்தில் பாசம் இருக்கிறது. மற்ருெரு கரத்தில் அங்குசம் இருக்கிறது. பின்னும் ஒரு கையில் ஐந்து மலர்களாகிய பாணங்கள் இருக்கின்றன. பிறரைக் கட்டுகின்ற பாசத்தைத் தன் கையில் கொண்டு விளங்கு கின்ற பெருமாட்டி, பாசத்தைக் கட்டும் இயல்பு உடையவள் என்பதைக் காட்டுகிறது. பாசமும், அங்கு சமும் அகங்காரம் என்னும் யானையை அடக்கக் கையில் ஏந்தியிருக்கும் ஆயுதங்கள். மனிதன் ஆணவ முனைப் பினல் நான் நான் எனத் திரிந்து பல செயல்களேச் செய்து மேலும் மேலும் பிறவிகளில் வீழ்ந்து அலைகிருன். எல்லா வற்றுக்கும் மூலமாகிய மலம் ஆணவம். அதற்கு யானையை உவமை கூறுவது வழக்கம். அகங்காரம் என்னும் மத யானையை அடக்குவதற்கு நம்மால் இயலாது. எம்பெரு மாட்டியின் திருவருள் இருந்தால்தான் அந்தக் காரியத்தைச் செய்யலாம். மதயானையை அடக்குவதற்குரிய கயிற்றையும், அங்குசத்தையும் அம்பிகை தன் கையில் வைத்திருக்கிருள். நம்முடைய ஆணவ மலத்தை அடக்கி, இன்பம் தருவதற் குரிய ஆற்றல் அம்பிகையிடம் இருப்பதை அந்த இரண்டு ஆயுதங்களும் காட்டுகின்றன. . ..

"ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி அது பூதி அடைவித்ததொரு பார்வைக்காரனும்'

என்பது திருவகுப்பு.

லலிதா சகசிரநாமம் பாசத்தை ஆசையின் வடிவு என்றும், அங்குசத்தைக் குரோத்த்தின் வடிவு என்றும், கரும்பு வில்லை மனத்தின் வடிவு என்றும். பானங்களைப் பஞ்ச தன்மாத்திரையின் வடிவு என்றும் கூறும். எம்பெரு.