பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மாலை பூண்ட மலர்

ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருப்பவளா? உலக மெல்லாம் மிகப்பெரியவர்கள் என்று எந்த மூர்த்திகளைத் துதிக்கின்றதோ, அவர்கள் எம்பெருமாட்டியின் புகழைப் பாடுகிருர்கள். உலகத்தில் உள்ள அடியவர்கள் இறை வியைப் புகழ்வது பெரிது அன்று; முனிபுங்கவர்கள் அவளுடைய துதிகளைப் பாடுவது அரிதன்று: சுந்தருவர், கின்னரர், வித்தியாதரர்கள் அன்னையின் இசை பாடுவதும் பெரிய செயல் அன்று; தேவர்கள் பாராட்டுகிருர்களே. அதுவும் அருமையான காரியம் அன்று; தேவர்களுக்கு அதிபதியாகிய இந்திரன் பொழுது விடிந்தால் அம்பிகை யைப் புகழ்ந்து வாழ்த்தி வாழ்கிருன்; அது கூடப் பெருமை யன்று. இவர்களுக்கெல்லாம் மேலான வன் பிரமதேவன்; படைப்புத் தொழில் புரியும் பெரியவன்; அவன் அம்பிகை யைப் போற்றுகிருன். தன் படைப்புத் தொழிலேத் தன்பால் வைத்துக் காப்பாற்றுபவள் அன்னை என்ற அறிவுடைய வகுதலால் அவளை ஏத்துகிருன். அவன் மட்டுமா? அவனைப் பிறப்பித்தவர் திருமால்; காப்புத் தொழிலே நடத்தும் பெருமான் அவர்; அவரும் அம்பிகையை ஏத்து கிரு.ர். கமலாr நிஷேவிதா' (558) என்று லலிதா சகசிரநாமம் கூறுகிறது. பிரமனும் திருமாலும் ஒன்றுகூடி அம்பிகையை வாயாரத் துதிக்கிரு.ர்கள். எவ்வளவு பெரியவர்கள் அவர்கள்! 'ப்ரம்ஹோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துத வைபவா (83) என்னும் லலிதாம் பிகையின் திருநாமமும், ஹரி ப்ரஹ்மேந்த்ர ஸேவிதா' (297) என்ற திருநாமமும் இந்த உண்மைகளை உரைக் கின்றன. -

இவ்வளவு உயர்ந்தவள் என்று நாம் நினைத்து வியக்கிருேம். அம்பிகையின் பெருமை அதோடு நிற்கிறதா? சர்வ சங்காரம் செய்யும் சிவபெருமானே அவளைத் துதிக்கிரு.ர். மஹாபைரவ பூஜிதா' (231) என்று சகசிரநாமம் கூறுகிறது. -