பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவர் பாகத்தில் இருந்தவள் 139*

அன்னே எப்படி அகந்தை முதலியவற்றை மாய்க்கும் பேராற்றல் உடையவளோ அப்படியே சிவபெருமானும் மும்மலங்களை அடியோடு அழிக்கும் பேரருள் உடையவன். திரிபுர சங்காரம் இந்த தத்துவத்தைச் சொல்கிறது. ஆணவம், மாயை, கர்மம் என்று சொல்லும் மூன்று மலங் களும் ஞானத்தினல் மாய்ந்துவிடும். திரிபுரங்களைத் தன்னுடைய புன்னகையால் எரித்தவன் இறைவன். திரிபுரங்களுக்குத் தலைவர் ஆகிய மூன்று அசுரர்கள் பறக்கும் தங்கள் கோட்டைகளைத் திடீர் திடீரென்று எங்காவது இறங்கச் செய்து அங்குள்ள உயிர்க் கூட்டங் களே அழித்து வந்தார்கள். அதல்ை அல்லறுற்ற தேவர் களும், பிறரும் இறைவனிடம் முறையிட இறைவன் திரிபுரங்களைச் சங்காரம் செய்வதற்குப் புறப்பட்டான்; மேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாளுகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு புறப்பட்டான். அப்போது திருமால் முதலியவர்கள் நம்மால்தான் திரிபுர சங்காரம் ஆகப் போகிறது என்று அகங்கரித்தார்கள். அதனைக் கண்டு நகைப்பவனைப்போல இறைவன் புன்னகை பூத்தான். அந்தப் புன்னகையில்ை மூன்று புரங்களும் எரிந்தன. திருமால் முதலியவர்களுடைய அகந்தையும் அழிந்தது. சிவபெருமான் மூன்று மலங்களையும் அழித்தருளும் பேரரு ளாளன் என்பதைத் திரிபுர சங்காரம் காட்டும். இந்த, உண்மையைத் திருமூலர் சொல்கிரு.ர்.

"அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்: முப்புர மாவது மும்மல காரியம்; அப்புரம் எய்தமை யாரறி வாரே...'

பிறருக்குத் தீமை புரியவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அதனையே தம்முடைய தொழிலாகச் செய்து, வந்த வஞ்சகர்கள் திரிபுரங்களுக்குத் தலைவர்களாகிய,