பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 . மாலை பூண்ட மலர்

அசுரர்கள். அவர்கள் யாருக்கும் அஞ்சுவது இல்லை. அத்தகையவர்களையும் அஞ்சும்படி செய்தான் இறைவன். திரிபுர சங்காரம் செய்யவேண்டுமென்ற வியாஜத்தில் மேரு மலையை வளைத்து வில்லாகக் கையில் கொண்டான். அவனுடைய மேனி செக்கச்செவேல் என்று இருக்கிறது. எரிபுரை மேனி என்கிருர். எல்லாவற்றையும் சுட்டுத் தூய்மை செய்வது அக்கினிக்கு இயல்பு. அது எப்போதும் மேலே நோக்கும். செம்மையான் வடிவம் உடைய இறைவனே மேல் நோக்கும். ஞானத்தையே வடிவாக உடையவன்; தீமையைச் சுட்டு எரிக்கும் அருளாளன். எரி புரை மேனி இறைவனக இருக்கும் கோலம் அவற்றைச் சுட்டிக் காட்டுகிறது. அத்தகைய ஞான மூர்த்தியின் சரி பாதியில் இருந்து நலம் செய்கிறவள் அம்பிகை. இதன. அடுத்தபடி சொல்கிரு.ர். . . -

- - தீமை நெஞ்சில் பரி புர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சில்க்கை எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

அம்பிகையின் திருவடியில் சிலம்பு புலம்புவதை, சிஞ்ஞான மணி மஞ்ஜீர மண்டித பூர்பதாம்புஜா (46) என்கிற வலிதா சககிரநாமம் குறிக்கும். அம்பிகையின் பாசத்தையும், பஞ்சபாணத்தையும் பல இடங்களில் அபிராமிபட்டர் சொல்கிரு.ர். இங்கே சொன்னபடி, 'பாசாங் குசை பஞ்சபாணி வஞ்சர், உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி' என்று 76-ஆம் பாடலிலும் சொல்கிருர். முன்னைப் பாட்டில் பனிமொழி என்று கூறினிவர் இங்கே அந்த மதுர வாசகத்தை இன்சொல் என்று சொன்னர். திரிபுரசுந்தரி என்பதன் விளக்கத்தை 2-ஆம் பாட்டின் உரையில் காண ல்ாம். அம்பிகையின் திருமேனி சிந்துார வண்ணம் உடையது என்பதை, சிந்துர வண்ணப் பெண்ணே (6), சிந்துர்