பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவரினும் மேலானவள் 145 .

என்று சிதம்பரச் செய்யுட் கோவையிலும் (33) பாடுகிரு.ர். சிவஞான சித்தியார், "சத்திதான் சிவத்தை யீன்றும் என்று கூறுகிறது. தத்துவங்கள் ஒன்றினின்று ஒன்று தோன்றும் முறையில் இந்த உறவு தெளியப்பெறும். சிவ தத்துவத்தினின்றும் சக்தி தத்துவம் தோன்றுகிறது. அப்போது சிவனுக்குச் சக்தி மகள் முறை ஆகிருள். மீண்டும் அந்தச் சக்தி தத்துவத்தினின்றும் சதாசிவ , தத்துவம் தோன்றுகிறது. சக்திக்குச் சதாசிவம் மகனகிருன். இந்தத் தொடர்பை எண்ணியே இங்கே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்' என்ருர்.

தவளே இவள்; எங்கள் சங்கரளுர் மனைமங்கலமாம் அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள்.

எல்லாரினும் சிறந்தவனும் பெருந்தலைவனுமாக" இருப்பவன் பரமசிவன். அவன் தேவர்கோ அறியாத தேவதேவன்; மகாதேவன். அவனுக்கும் அன்னையாகும் நிலையில் அபிராமி இருக்கிருள். அவளைப் பராம்பிகை யென்றும் பரதேவதை யென்றும் சொல்வார்கள். எல்லா ரினும் உயர்ந்த தெய்வம் பரமேசுவரன்; அவனுக்கும். மேலானவள் அம்பிகையென்ருல் அவளினும் சிறந்தவர் யாரும் இல்லை என்பது புலகுைம். எல்லாத் தேவர்களுக்கும். மேலாக, யாவரையும் தன் கீழ் இருக்கச்செய்து உயர்ந்து. நிற்கிறவள் இந்தப் பெருமாட்டியே.

ஆகையில்ை இவளே கடவுளர் யாவர்க்கும் மேலே

இறைவியும் ஆம். .

இத்தகைய பரதேவதையை உபாசனை புரிந்து அவளுடைய அருளைப் பெற்றவர்களுக்கு மற்றவர்கள் எம்மாத்திரம்? மற்றத் தெய்வங்கள் தமக்கு ஏதேனும் ஒரு குறை உண்டானல் வாடி வருந்தித் தம்மினும் உயர்ந்த தெய்வத்தை நாடி அடைந்து துணை வேண்டும்.

மாலை-10