பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மாலை பூண்ட மலர்

ஒருவன், "இவனுக்கு எப்படி இந்த நிலை வந்தது?’ என்று அதிசயிக்கிருன். ஒரு வேலையும் செய்யாமல் சாப்பிடு . கிருனே!' என்றும் நினைக்கிருன் நெல் அறுவடையாவ தற்கு முன்பு அந்தச் செல்வனைப் பார்த்திருந்தால், அவன் உழைத்த உழைப்புத் தெரியும். அவ்வாறே பல பிறவி களில் பல்வேறு வகையில் உபாசனை செய்து அம்பிகையின் அருள் பெற்று இப்போது ஜீவன் முக்த தசையில் இருக் கிருர்கள் அன்பர்கள். அவர்கள் தொண்டு ஏதும் செய்வதில்லையே! அம்பிகையின் பாதத்தைத் தொழுவ தில்லையே! மனம் போனபடி நடக்கிருர்களே!' என்று சிலருக்குத் தோன்றலாம். - - .

"சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்

அத்தன்...' என்று திருவாசகமும்,

தேறும் மோனமா ஞான போதனர்

செய்த செய்கையே செய்யும் மாதவம்

கூறும் வாசகம் யாவும் மந்திரம்

கொண்ட கோலமே கோல மாகுமால்'

என்று பாசவதைப் பரணியும் கூறுகின்றன. அத்தகையவர் களின் நிலையை அபிராமிபட்டர் இப்போது நினைக்கிரு.ர். 'அவ்வாறு பலர் பழங்காலத்தில் இருந்தார்கள் அல்லவா?’’ என்று கேட்கிரு.ர்.

தொண்டு செய்யாது கின் பாதம் தொழா துணிந்து இச்சையே - பண்டு செய்தார் உளரோ இலரோ?

"அவர்கள் அவ்வாறு இருப்பது சரியால்ை நானும் ஏன் அப்படி இருக்கக்கூடாது?’ என்று கேட்கிரு.ர்.