பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மாலை பூண்ட மலர்

"பண்டு தங்கள் இச்சைபோல் நடந்து பாதும் செய்யா மல் பலர் இருந்தார்களே: நானும் அப்படி இருக்கக் கூடாதா?' என்று கேட்டவர் சோம்பேறிகள் சொல்லு, வதை நினைத்தே அப்படிச் சொன்னர். ஏனெனில், உயர்ந்த அநுபூதிமான்கள் எப்படியிருக்கிருர்களோ அப்படி நாமும் இருக்கலாம் என்று எண்ணுவது தவறு என்பதை இவர் நன்கு அறிந்தவர்.

- அபிராமிபட்டர், நானும் அந்த ஞானிகளைப்போலச் செய்யக்கூடாதா?’ என்று கேட்டவர் பின்பு, 'தாயே, நான் எது செய்தாலும் என்னைப் பொறுத்தருள வேண்டும். வெறுக்கக்கூடாது. எனக்கு உன்னேயன்றிப் புகல் வேறு இல்லை' என்கிரு.ர்.

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின்

வெறுக்கை அன்றே.

கல்லூரியில் படித்துப் பரீட்சை எழுதிய இளைஞன் ஒருவன் தன் வீட்டுக்கு வந்திருக்கிருன். அப்போது வீட்டில் இருக்கிற சிறு பையனுக்குப் பரீட்சை நடக்கப் போகிற காலம். அம்மா அவனைப் பார்த்து, 'இன்னும் ஒரு வாரத்தில் பரீட்சை வருகிறது; நீ படிக்கவேண்டும்' என்று சொல்லுகிருள். பையுன் தாயினிடம் உள்ள உரிமையில்ை, "போ அம்மா, அண்ணு படிக்கிருன? நான் மட்டும் ஏன் படிக்கவேண்டும்?' என்று கெஞ்சிக்கொண்டே கேட்கிருன். அப்போதைக்கு அவன் அப்படி வேடிக்கையாகக் கேட்டாலும் அவன் நல்ல பையனைதால் பின்பு புத்தகத் தைப் படிக்க ஆரம்பிக்கிருன். அபிராமிபட்டரும் தாயிடம் நெருங்கிக்கொஞ்சும் குழந்தையாதலால், முதலில், "நானும் அவர்கள் மாதிரி செய்யக்கூடாதா?’ என்று சொல்லி விட்டு, 'அம்மா, என் குற்றங்களையெல்லாம் பொறுத்துக்

காள்' என்று விண்ணப்பித்துக்கொள்கிருர், .