பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தவமும் கைதவமும் 155,

தொண்டுசெய் யாதுகின் பாதம் தொழாது

துணிந்திச்சையே பண்டுசெய்தார்உள ரோஇல் ரோ? அப்

பரிசடியேன்? கண்டுசெய் தால்அது கைதவ - மோஅன்றிச் செய்தவமோ?

மிண்டுசெய்தாலும் பொறுக்கைன் றேபின்

வெறுக்கை அன்றே.

(தாயே, நின் திருவடிக்குக் கைங்கரியம் செய்யாமலும் நின் பாதத்தை வணங்காமலும் உண்மையான பொருள் இன்னதென்று உறுதியாகத் தெளிந்து, தம் மனம் விரும்பி யவற்றையே செய்தவர்கள் பழங்காலத்தில் இருந்தார் களோ இல்லையோ? (அப்படி மெய்ஞ்ஞானியர் உன்னு டைய திருவருள் அநுபவத்தால் இருந்தார்களாதலால்) அவ்வண்ணமே அடியேனும் அவர்களைப் பார்த்து என் இச்சைக்குரிய செயல்களைச் செய்தால் அது வஞ்சக மாகுமா? அப்படியன்றி அவர்களுடைய செய்கைகள் எல்லாம் தவமாவது போல என் செய்கைகளும் தவ மாகுமா? அடியேன் மாறுபட்ட செயல்களைச் செய்தாலும் நான் உன் குழந்தை என்ற உண்மை கருதி என்னைப் பொறுப்பது நன்மையாகும், அப்படியின்றி என்னே வெறுத் துப் புறக்கணித்தல் நன்று அன்று. - -

கைதவம் - வஞ்சன. மிண்டு மாறுபாடான செயல் ’கொடிய செயல் என்பது மாகும்.

இது அபிராமி அந்தாதியில் 45-ஆம் பாட்டு.