பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் கருணை - 15宫

மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்ற பழமொழி தாயின் அன்பை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

தெய்வம் கருணைக்கு இருப்பிடம், தாய் தயையின் நிலைக்களம். - -

'தாயிற் சிறந்த தயாவான தத்துவனே'

என்று மாணிக்கவாசகர் பாடுவார். 'அன்னை தயையும்' என்பது பழம்பாட்டு.

தெய்வமே தாயாக இருந்துவிட்டால் கருணை வெள்ள மாகப் பேருக்கெடுத்தோடும். அம்பிகை கருணையே வடிவான வள். சிவபெருமானுடைய திருவருளையே சக்தி ᏌᏞ] fᎢ # வழிபடுவது மரபு. "அருளது சத்தியாகும் அரன் றனக்கு' என்று சாஸ்திரம் பேசுகிறது.

தெய்வம் அருளுடையதாக இருப்பதல்ைதான் நாம் உய்கிருேம். நாம் செய்யும் தீச்செயல்களுக்கெல்லாம் தக்கபடி தண்டனை கொடுப்பதானுல் எந்தக் காலத்திலும் நாம் உய்யவே முடியாது. தெய்வம் தன் திருவருளால் நம்முடைய குறைகளை யெல்லாம் மறந்து நாம் சிறிதளவு அன்பு செய்தாலும் அதைப் பெரிதாகப் பாராட்டி அருள் புரிகிறது. - -

நல்லவர்களை நாம் அவமதித்திருக்கிருேம். பக்தர்களை வேஷதாரிகள் என்று இழித்திருக்கிருேம். கடவுளை வழிபட்டு வாழும் பலரை நாம் நிந்தித்திருக்கிருேம். இவற்றையெல்லாம் பெரிய குற்றமாக எண்ணி நமக்குத் தண்டனை தரப்புகுந்தால் நாம் இன்னும் பல்லுழி காலம். நரகத்தில் உழலவேண்டியதுதான். அம்பிகை அப்படிச் செய்கிறதில்லை. . . . . : சிறு குழந்தைகள் தங்களுக்குள் அடித்துக்கொண்டா லும், சில சமயங்களில் அன்னையை வைதாலும்,