பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மாலை பூண்ட மலர்

அவள் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. வேண்டிய உணவை உரிய காலத்தில் குழந்தைகளுக்கு ஊட்டுகிருள். எப்போதாவது குழந்தையை அடித்து விட்டால் பிறகு அதற்காக வருந்தி இறுக அணைத்துக் கொள்கிருள். .

அன்னே அபிராமி இந்தத் தாயைவிட ஆயிரம் மடங்ரு கருணை உடையவள். நாம் திருந்தவேண்டுமென்றும், தன்ைேடு இருந்து வாழவேண்டுமென்றும், தன் அரவணைப்பில் நல் வாழ்வு பெறவேண்டுமென்றும் திருவுள்ளம் கொண்டு பல பல நன்மைகளைச் செய்கிருள். அத்தகையவளிடம் உண்மையான பக்தனுக்கு அச்சம், உண்டாகவே உண்டாகாது. உன்னுடைய தயை என்னைக் காப்பாற்றும் என்ற உறுதியோடு இருப்பான்.

இத்தகைய எண்ணம் காரணமாக மேலும் மேலும் பிழை பண்ணிக்கொண்டே இருப்பவன் புக்தன் ஆகமாட் டான். நம்மை அறியாமலே பல தவறுகள் செய்கிருேம். நம் மனம் அறிய எந்தப் பிழையும் செய்யலாகாது. ஆனல் நம்மை அறியாதபடி தவறு நேருமானல் அம்பிகை நம்மைப் பொறுத்தருளிக் காப்பாற்றுவாள்' என்றே உண்மைப் பக்தன் எண்ணுவான், ஆகையால் ஒவ்வொரு கணமும் மகா மாதாவை எண்ணி, யாருக்கும் துன்பம் இழைக்கா மல் வாழ்வான். . -

பாவங்களை யெல்லாம் மனம் அறியச் செய்துவிட்டு பல தீட்டுக்கு ஒரு முழுக்கு' என்று அம்பிகையினிடம் வந்து அவளைப் புகழ்ந்தால் அது உண்ம்ையான பக்தி ஆகாது. பக்தன் மிகத் தூயவனக இருந்தாலும் எங்கே அசுத்தம் நம்மைப் பற்றிவிடுமோ என்று அஞ்சுவான். சிறிய குற்றத்தைச் செய்தாலும் பெரிய குற்றத்தைச் செய்தவனைப் போல வருந்துவான். தன் குணங்களைச் சிறிதளவாகவும் குற்றங்களைப் பெரியனவாகவும் காண்பது சான்ருேர்,