பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மாலை பூண்ட மலர்

வாழ்த்துகிறேன். புகல் புகுவதற்கு அயலிடம் உண்டு என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனவே நீ என்னை மன்னித்து எனக்கு அருள் செய்யவேண்டும்' என்று தம் வேண்டு கோளைக் குறிப்பாகச் சொல்லுகிரு.ர்.

மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே!

Iஅடியேனை நீ மறுப்பதற்குரிய இயல்பையுள்ள செயல் களைச் செய்தாலும் அடியேன் உன்னையே வாழ்த்துவேன்.1

"என் அறியாமையால் நீ வெறுப்பதற்குரியவற்றைச் செய்தாலும் உன்னை வாழ்த்திப் புகலடைகிறேன்' என்ருர். 'நீ என்னை மறுக்கும் செயல்களைப் புரிந்தாலும் நான் உன்னை நீங்காமல் உன்னையே பற்றிக்கொண்டு வாழ்த்துவேன்’ என்றும் பொருள் கொள்ளலாம். ' துடைக்கினும் போகேன்' என்பது தேவாரம். *

'அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழும்குழவி யதுவே போல் -

இருந்தேனே' என்பது குலசேகரப்பெருமாள் திருவாக்கு.

குற்றம் சிறிதாக இருந்தாலும் அதைப் பெரிதாக எண்ணி மன்னிப்புக் கேட்கும் பக்தர் இயல்பும், அடியார் குறைகளை எண்ணுமல் அருள்புரியும் அம்பிகையின் இயல்பும் இந்தப் பாட்டினல் தெரியவருகின்றன.

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

தம் அடி யாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை புதிய

தன்றே?புது நஞ்சைஉண்டு கறுக்கும் திருமிடற் ருன்இடப்

பாகம் கலந்தபொன்ளே! மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே.