பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் கருணை - 163

(புதிய ஆலகால விடத்தை நுகர்ந்து கறுத்த திருக் கழுத்தை உடைய சிவபிரானது வாம பாகத்தில் பொருந்திய பொன்னிறமேனிப் பெருமாட்டியே! தாம் வெறுப்பதற்குரிய இயல்பினவாகிய செயல்களைத் தம் அடியவர்கள் செய் தாலும் அவர்களை அறிவினுல் மிக்க பெரியோர்கள் பொறுத்தருளும் இயல்பு இவ்வுலகத்தில் இன்று நேற்று வந்த புதிய வழக்கம் அன்றே; ஆதலால் நீ ஏற்றுக் கொள்ளாது விலக்கும் இயல்பையுடைய செயல்களை அடியேன் செய்தாலும் (அவற்றை நீ பொறுத்தருள்வாய் என்ற தைரியத்தால் மீட்டும்) நின்னை வாழ்த்தித் துதிப்பேன்.1 -

இது அபிராமி அந்தாதியில் 46-ஆவது பாடல்.

-ساجc:بع*oمس