பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு

வாழ்வு என்பது யாது? இந்தக் கேள்விக்குப் பலர் பல வகையில் விடை கூறுவார்கள். யாரேனும் ஒருவர் உயிருடன் இருக்கிருரா, இல்லையா என்ற ஜயம் உண்டாகிப் பின்பு அவர் வாழ்கிருர் என்று தெளியும்போது, வாழ்வு என்பது உடம்பும் உயிரும் ஒன்றியிருப்பது என்று பொருள்படும் இங்கே வாழ்வுக்கு எதிராக இருப்பது சாவு. உயிரோடு இருப்பது மட்டும் வாழ்வு என்று சொல்லும்போது சாவு இல்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுகிருேம். ஆனல் * முப்பது வருஷம் வாழ்ந்தாரும் இல்லை; முப்பது வருஷம் கெட்டாரும் இல்லை’ என்ற பழமொழி சொல்லும்போது வாழ்வு என்பது வேறு ஒன்றைக் குறிக்கிறது. கேடு அல்லது தாழ்வு இல்லாமல் வாழும் நிலையையே அது புலப்படுத்து கிறது. உடலும் உயிரும் சேர்ந்து வாழும் வாழ்வுக்கு மேலே, இன்பமாக வாழும் வாழ்க்கையையே அது குறிக்கிறது. ஆகவே இன்ப வாழ்வே வாழ்வு என்று சொல்வதற்குரியது. உயிருடன் வாழ்வது வாழ்வென்ருல் இன்பமாக வாழ்வது வாழும் வாழ்வு என்றும், துன்பத்துடன் வாழ்வது வாழாத வாழ்வு என்றும் கூறலாம். துன்பம் நிரம்பிய வாழ்வை அவ்வாறு கூறுவது பொருந்தும் என்பதை, .

வாழ்கின்ருய் வாழாத நெஞ்சமே ’

என்ற திருவாசகப் பகுதியிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

இன்பவாழ்வு வாழும் மனிதன் வாழ்வுடையவன்

என்பதிலும் ஒரு தடை வருகிறது. அந்த வாழ்வு எப்போதும் இருப்பதில்லை. ஏதோ ஒரு காலத்தில்