பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு 165

தொடங்கி மற்ருெரு காலத்தில் போய்விடுகிறது. சில காலத்துக்கு மட்டும் இன்பமாக வாழ்கிருன். அதைத் தானே. முப்பது வருஷம் வாழ்ந்தவரும் இல்லை’ என்ற பழமொழி கூறுகிறது? மனிதனுடைய ஆயுள் நூருளுல் முப்பது ஆண்டு வாழ்வு முப்பது சதவிகிதமாகிறது. இப்போதெல்லாம் பள்ளிக்கூடத் தேர்வில் நாற்பது சதவிகிதம் புள்ளி பெற்ருல்தான் தேர்ச்சி பெறலாம். 'அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை’ என்ற பழமொழியும் அதையே குறிக்கிறது. ஆகவே முப்பது சதவிகிதம் இன்ப வாழ்வாக இருந்தால், சோதனையில் வெற்றி உண்டாகாது . அதை வாழ்வு என்று சொல்வது பிழை. பெரும்பான்மையாக உள்ள எழுபது சதவிகித்த்தைக் கொண்டே வாழ்வின் இயல்பைத் தெரிந்துகொள்ளவேண்டும். அப்படிப் பார்த் தால் யாரும் இன்பவாழ்வு வாழ்ந்தவராகத் தோன்ருது. 'பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்' என்று மணிமேகலை கூறுகிறது.

முப்பது ஆண்டு வாழும் இன்ப வாழ்வைப் பெரிதாக எண்ணலாம் என்று சொல்வதற்கு மற்ருெரு தடையும் உண்டு. முப்பது ஆண்டுகளும் ஒரே இன்பமாய் வாழ இயலாது. இன்பமும் துன்பமும் கலந்து கலந்தே அநுபவிக் கும்படி அமைந்தது மனிதனுடைய வாழ்வு. புண்ணியம் பாவம் என்னும் இரண்டும் கலந்த மிச்ர கர்மத்தின் பயனே அநுபவிக்கப் புகும் மனிதன் தனியான இன்பத்தையோ தனியான துன்பத்தையோ அநுபவிப்பது இல்லை. எது மிகுதியாக இருக்கிறதோ அதைக்கொண்டே இன்பம் அதுபவிக்கிருன் என்றும், துன்பப்படுகிருன் என்றும் சொல்கிருேம். தொடர்ந்து இடையீடில்லாத இன்ப வாழ்வு இவ்வுலகில் யாருக்கும் சித்திப்பதில்லை. ஆகவே, வாழ்வு என்பது இன்ப வாழ்வைக் குறிப்பதாகக் கொண்டால், உலகத்தில் யாருமே வாழவில்லையென்றும் யாவரும் போலி