பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மாலே பூண்ட மலர்

வாழ்வே வாழ்கிரு.ர்கள் என்றும் தெளிவாகும். அது கருதியே பெருமக்களெல்லாம், வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம்' என்றும் , " ஆதலால் பிறவி வேண்

டேன் அரங்கமா நகரு ளானே' என்றும் பாடினர்கள்.

அப்படியானல், என்றும் இன்பமாகவே வாழும் வாழ்க்கை ஏதும் இல்லையா? நாம் துன்பம் அடைவதற்குக் காரணம் நம் வினை. உடம்பு, மனம் முதலியவற்றின் தொடர்பு இருக்கும் வரையிலும் வினை இருக்கும்; துன்பமும் இருக்கும். இவை யாவும் நீங்கிக் கர்ம பந்தமற்றுச் செயலற்று வாழும் வாழ்வு ஒன்று உண்டானல் அதுவே: என்றும் குன்ருத இன்ப வாழ்வாக இருக்கும். அந்த வாழ்வையே பேரின்ப வாழ்வென்றும், வீடென்றும், மோட்ச வாழ்வென்றும் சொல்வார்கள்.

கவலையும் துன்பமும் இல்லாமல் அமைதியும் இன்பமும் பெற்ற வாழ்வு ஒன்று உண்டென்ருல் அதை எப்படிப் பெறுவது? அதற்குத் தக்க வழி எது? நம்முடைய முயற்சி யினால் அதைப் பெற முடியுமா? அன்றி வேறு துணையினல் பெறக்கூடுமா? இத்தகைய கேள்விகளுக்கு விடை கூறுகிருர் அபிராமிபட்டர். -

வாழ முடியாதபடி தத்தளித்துப் பணத்தினுல் வாழலாம் என்று எண்ணி அதைத் தேடுகிருன் ஒருவன். பணத்தை ஈட்டி வாழத் தலைப்படுகிருன். ஆனால் அவனுடைய வாழ்வில் அமைதி உண்டாவதில்லை. வாழ வகை செய்வது. பணம் அன்று என்ற முடிவுக்கு வருகிருன். கல்வியிலே சிறந்து கூரிய அறிவுடையவகை ஒருவன் விளங்குகிருன். பலரும் அவனைப் புகழ்கிருர்கள்; வேண்டியவற்றை அவனுக்கு வழங்குகிருர்கள். ஆனலும் அவன் சாந்தியுடன் வாழ முடிவதில்லை. அறிவிலுைம் இன்பவாழ்வு வாழமுடி யாது என்று முடிவுகட்டுகிருன். இப்படியே உடல் வலிமை யினாலும், மக்களுடைய துணையிலுைம், பல்வகைப்