பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - மாலை பூண்ட மலர்

கண்டதோடு நின்றவை பல. கண்டு பிறகு கொண்டு அப்பால் கைவிட்டவை பல. இப்போதுதான் நிச்சயமாக இதுதான் வாழும் வகைக்கு உரியது என்று ஒன்றைக் கண்டேன்; அதைக் கொண்டேன்; விடாமல் கைப்பற்றிக் கொண்டேன்’ என்று சொல்வது போல இருக்கிறது.

காணுது திகைத்து வருந்தியவன் கண்டபோது அடையும் வியப்புணர்ச்சி தோன்றும்படியாக,

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்

என்கிருர், வாழ்வதற்குப் பல பல வேண்டுமென்று மக்கள் ஆசைப்பட்டுத் தேடிப் பலவற்றை ஈட்டுகிருர்கள். அவற்ருல் அவர்கள் துன் பத்தையே அடைகிருர்கள்.

யாதனிள் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்'

என்ற உண்மை புலனுகிறது. அப்படிப் பலவற்றை நம்பிக் கைக்கொள்ளவில்லை அபிராமிபட்டர். ஒன்றே ஒன்றுதான் வாழும்படி செய்யும், அந்த ஒன்றையே கண்டு கொண்டேன் என்ருர். - -

"ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந் - தேன்; ஒன்றேளன் உள்ளத்தின் உள்ளடைத்தேன்'

என்பது காரைக்காலம்மையார் திருவாக்கு. அந்த ஒன்றை மறந்துவிட்டு உலகெல்லாம் எதை எதையோ தேடி அலைகிறதளுல் மனித வாழ்வு வீணுகிப் போகிறது.

ஒன்று கண்டு கொண்டேன்' என்றவர் அதை இன்னதென்று சொல்லவருகிருர். அது, இதோ பாருங்கள் என்று சுட்டிக்காட்ட முடியாதது; இன்ன இயல்புள்ளது என்று வருணிக்கமுடியாதது; இப்படி இருப்பது என்று