பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு r 169

மனத்தால் பற்றித் தெரிந்துகொள்ள முடியாதது. மனத்தா லும் வாக்காலும் பற்ற முடியாத பரம்பொருள் அது. அவற்றுக்கு அகப்பட்டவற்றை நாம் கண்டு பெற்ற பயன் நமக்குத் தெரியுமே! இதுவோ மனத்தினல் எவ்வளவு விரும்பினுலும் அணுகவொண்ணுதது; இத்தகையது என்று வாயினுல் எடுத்துச் சொல்ல முடியாதது.

மனத்தே ஒருவர் - வீழும்படி அன்று விள்ளும்படி அன்று.

அபிராமிபட்டர் அம்பிகையைத்தான் இவ்வாறு கூறு கிரு.ர். அப்பெருமாட்டியின் திருவருள் ஒன்றினுல்தான் என்றும் பொன்ருத நிரதிசய இன்ப வாழ்வு கிடைக்கும். ஆகவே அவர் வாழுவதற்குத் துணையாகக் கண்டுகொண்ட மெய்ப்பொருள் அம்பிகையே. அவள், அசிந்த்ய ரூபா (லலிதா சகசிரநாமம், 554) என்று போற்றப் பெறுபவள். மனம் அணுகாத பரதேவதை அவள். மனம் மட்டுமா? வாக்கும் அவளை எட்டாது. மனுேவாசாமகோசரா (லலிதா. 415) என்பது அவள் ஆயிரம் திருநாமங்களில் ஒன்று. ஆதலின் அவளை, மனத்தினுல் ஒருவர் விரும்பித் தியானம் செய்யும் முறையில் உள்ளது அன்று; வாயில்ை இத்தகையது என்று சொல்லும் வண்ணம் அமைந்ததன்று' என்று கூடுகிருர்,

தனி மனிதன் தன்னுடைய மனத்தாலும் வாக்காலும் உணரவொண்ணுத பொருள் என்றபிறகு, பலர் கூடிப் பெரு முயற்சி செய்தால் கண்டுபிடித்துவிடலாமோ என்ற கேள்வி எழலாம். அதற்கு விடை கூறுவாரைப்போல, "அந்தப் பொருள் பிரபஞ்சத்தின் அளவுக்குள் அமைந்தது. அன்று; பிரபஞ்சத்திலுள்ள உயர்ந்த பொருளுக்கும் பொருளாய் விரிந்த பொருளுக்கும் விரிந்த பொரு வாய் ஆழ்ந்த பொருளுக்கும் ஆழ்ந்த பொருளாய்