பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மாலே பூண்ட மலர்

இருப்பது என்பதை உணர்த்த வருகிருர், அப்படிச் சொல்லாமல் அந்தக் கருத்துக் குறிப்பாகப் புலப்படும்படி, அது ஏழு கடலுக்கும் எட்டாதது; ஏழு உலகங்களுக்கும் கிட்டாதது; எட்டு மலைகளுக்கும் தட்டுப் படாதது" என்கிருர்,

வேலே நிலம் ஏழும் பருவரை எட்டும் எட்டாமல்

வேலை ஏழும், நிலம் ஏழும் என்று கூட்டவேண்டும். கடல்கள் ஏழு என்பர். உப்புக்கடல், தயிர்க்கடல், பாற். கடல், நன்னீர்க்கடல், கட்கடல், நெய்க்கடல், கருப்பஞ் சாற்றுக் கடல் என்பன அவை. கடல் கரையற்றது, ஆழ மானது. அவற்றிற்கே எட்டாதது என்பதளுல் வரையறை யற்றது, எல்லாவற்றிலும் ஆழமானது என்பது பெறப் படும். ஏழு உலகம் என்பது ஒரு மரபு. உலகம் விரிவுடை யது. உலகங்களை விட மிகவிரிவானது அந்தப் பொருள். உலகத்துக்கு எல்லையாய் அஷ்ட குலா சலங்கள் உண்டு என்பர். மலை உயரத்துக்கும் அளவின்மைக்கும் எடுத்துக் காட்டாக இருப்பது. அந்தப்பொருள் மலைகளைவிட உயர்ந்: தது; அளவிடற்கரியது. அளவிடற்கரிய பொருள் என்று மக்கள் கூறும் கடல் முதலியவற்றுக்கும் எட்டாத பொருள் என்பதல்ை அப்பொருள் எல்லா அளவுகளையும் கடந்தது. என்பது பெறப்படும். அம்பிகைக்கு அப்பிரமேயா’ என் பது ஒரு திருநாமம். அளவுகளையும் அளவைகளையும் கடந் தவள் அவள். -

தனிமனிதருடைய மனத்துக்கும் வாக்குக்கும் எட்டா மல், மனித சமுதாயத்தின் முயற்சிக்கும் அகப்படாமல், அளவிற் பெரியனவென்று நாம் அறிந்த எல்லாவற்றிற்கும் மேலே உள்ள பரம்பொருள் என்று பரதேவதையாகிய அபிராமியையே சொல்கிருர் அபிராமிபட்டர்.