பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

沮72 மாலை பூண்ட மலர்

மண்டலத்தின் நடுவில் வீற்றிருந்து அமுதமயமான நிலவு விசும்படி செய்கிருள். பானுமண்டல மத்யஸ்தா (275) என்றும், சந்த்ர மண்டல மத்யகா (240) என்றும் லலிதா சகசிரநாமம் போற்றுகிறது. அபிராமிபட்டர் இதைச் சொல்கிருர், -

இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

இரவையும் பகலையும் உண்டாக்கும் சந்திர சூரியர் களாகிய சுடர் இரண்டுக்கும் நடுவில் நிலையாக இருந்து ஒளி வீசுகின்றது' என்பது இதன் பொருள். .

பரிவொடு தான் போய் இருக்கும்...அலர்கதிர்

ஞாயிறும் திங்களுமே (34) என்றும், உறைகின்ற நின்

திருக்கோயில்...அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ' (20) என்றும் இந்த ஆசிரியரே முன்பு பாடியிருகிரு.ர்.

வாக்கும் மனமும் கடந்து வையமும் கடலும் மலையும் கடந்து நிற்கும் பரம்பொருளாகிய அம்பிகை யாவரும் காணும் சூரிய சந்திரர்களுக்குள் இருந்து ஒளி வீசி உலகை விளக்குகிருள்; அந்தப் பெருமாட்டியை நான் கண்டேன்; என்னுள்ளே தியானித்தேன்; எனக்குரிய பொருளாகப் பற்றிக்கொண்டேன். அதனல் என்றும் மாயாத இன்ப வாழ்வைப் பெறும் நிலையை அடைந்தேன்' என்று அபிராமி பட்டர் இந்தப் பாட்டில் சொல்கிரு.ர். -

வாழும் படி ஒன்று கண்டுகொண் டேன்:மனத்

தேஒருவர் r வீழும் படி அன்று; விள்ளும் படி அன்று:

வேலேரிலம் - ஏழும் பருவரை எட்டும்எட் டாமல்

இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து

கடர்கின்றதே,