பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு 173.

(அழிவற்ற இன்ப வாழ்வு வரழும்படியாக ஒரு பரம் பொருளைத் திருவருளால் பெற்ற ஞானத்தைக் கொண்டு அறிந்து கொண்டேன்; அது மனத்தில் ஒருவர் விரும்பித். தியானிக்குமாறு உள்ளதன்று; வாயினுல் இப்படி உள்ள தென்று உரைப்பதற்கும் உரியதன்று; கடல் ஏழும் உலகு ஏழும் பெரிய மலேகள் எட்டும் அணுகாமல், இரவையும் பகலையும் முறையே செய்யும் சுடர்களாகிய சந்திர சூரியர் களுக்கு நடுவே அமைந்து விளங்குகின்றது.

வாழும்படி உதவும் ஒன்று என்று பொருள் கொள்க,

வீழும் - விரும்பும். படி அன்று என்பதைப் படியது அன்று என்று பொருள் கொள்ள வேண்டும்; குனியைக் குணமாகக் கூறிய உபசார வழக்கு இது. விள்ளுதல் - கூறுதல். Gమిడి ஏழும் நிலம் ஏழும் என்று தனித்தனியே கூட்டுக. வேலை -

கடல். பருவரை - பருமையான மலை, சூழும் - செய்யும்.

சுடர் - சந்திர சூரியர். ஒள்று கண்டு கொண்டேன்; அது

வீழும்படி அன்று: விள்ளும்படி அன்று; சுடர்கின்றது என்று: எழுவாயை வருவித்துப் பொருள் செய்யவேண்டும்.)

ஒளிமயமான அம்பிகையைப் பற்றிக்கொண்டால்

இன்ப வாழ்வு பெறலாம் என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியின் 47-ஆம் பாடல்.