பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவாப் பேறு 177

தியானத்தால் மனம் ஞானம் நிறைந்து துன்பத்தை அகற்றி நிற்கும், .

அம்பிகையைத் தியானிப்பது எளிதான காரியம் அன்று. உடம்பினுலே. பல செயல்களை முறைப்படி செய்யலாம்; உரையிலுைம் திட்டமிட்டுப் பேசலாம். ஆனால் மனம் நாம் செய்யும் வரையறைக்குள் அடங்கி நிற்பதில்லை. பல காலம் செய்யும் பயிற்சியினல் அத்தகைய நிலை கைகூடி வர வேண்டும். நாம் செய்யும் செயல்களை நல்ல முறையில் வரையறுத்துக்கொண்டு செய்யவேண்டும். அதாவது நம் முடைய மனம் எந்த நிலையில் இருக்கவேண்டுமென்று விரும்புகிருமோ அதற்கு உதவியான செயல்களேயே செய்து, பழகவேண்டும். அம்பிகையின் உருவத்தை உள்ளத்தில் நிறுத்தவேண்டுமானல் அந்தப் பெ ரு மாட் டி யி ன் உருவத்தைப் பலகாலும் கண்டு, அவளுடைய திருக் கோயிலே வலம் வந்து, அவளுடைய அர்ச்சா மூர்த்தியை மலர்களால் பூசித்துப் பழகவேண்டும். அவளுடைய அன்பர் களோடு இடையருமல் நண்பு பூண்டு வாழவேண்டும். அவளுடைய திருநாமங்களையும் குணங்களையும் கருணைச் செயல்களையும் அடுத்தடுத்து வாயால் சொல்லிப் பழக வேண்டும். இப்படி உடம்பாலும் வாக்காலும் அம்பிதை யோடு தொடர்புடைய செயல்களைச் செய்தும் சொற்க ஆளப் பேசியும் பயின்றுவந்தால் நம்முடைய நெஞ்சம் அவளைப் பற்றிய எண்ணத்தில் ஈடுபடும். பழைய வாசனையினல் வேறு எண்ணங்கள் எழும்போது, அவற்றை அறிவிலுைம் அம்பிகையின்பால் வைத்த பேரன்பினுலும் மாற்ற வேண்டும். இவ்வாறு இடைவிடாது செய்து வந்தால் அம்பிகையின் திருவுருவம் உள்ளத்தில் பதியும்.

ஒன்றை மேலெழுந்தவாரியாக நினைப்பது வேறு; அழுந்தப் பதிப்பது வேறு. நம்முடைய மனம் எப்போதும்

மாலை-12 -