பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மாலை பூண்ட மலர்

முன் போன பிறவிகள் எத்தனையோ? இனி வர இருக்கும் பிறவிகள் எத்தனையோ? இவை மலை மலையாகக் குவிந் திருக்கின்றன. இவற்றைப் போக்க யாராலும் ஆகாது. அன்னையின் அருள் ஒன்றுதான் இந்த வஞ்சப் பிறவியை உடைத்துத் தூள் தூள் ஆக்கும் திறமையுடையது. இனி எனக்குப் பிறவியே இல்லை. பிறவிப் பெருமலையை நீ நின்னருளால் உடைத்துத் தகர்த்துவிட்டாய். என் செயலால் ஆனது அன்று இது. நின் திருவருள் செய்த அற்புதம் இது என்று கூறி, அந்தத் திருவருளின் பெருமையை எத்தகைய தென்று அடியேன் சொல்லிப் பாராட்டுவேன்' என்று அதிசயப்படுகிரு.ர். ஆனந்த

அநுபவத்திலே பிறந்த அதிசயம் இது. -

உடைத்தனை வஞ்சப் பிறவியை, ...............சுந்தரி, கின் அருள்.

ஏது என்று சொல்லுவதே!

இந்த நிலை எளிதில் வந்துவிட்டதா? இதற்கு முன் எத்தனையோ படிகளைத் தாண்டவேண்டி யிருந்தது. இப்போது முடிந்த இன்ப நிலையில் இருக்கும் ஆசிரியர் பின் திரும்பிப் பார்க்கிரு.ர். காரியத்தை முன்னே வைத்துக் காரணத்தைப் பின் வைத்துப் பேசுகிரு.ர். பிறவியினல் வரும் துன்பம் இல்லை யென்பதற்குக் காரணம், என் செயலாவது யாதொன்றும் இல்லை. என்ற உணர்வுதான். அந்த உணர்வு உண்டாவதற்குக் காரணமாக இருப்பது அன்னையின்பால் உள்ள இணையற்ற அன்பே. அவளை நினைந்து நினைந்து உருகும் அன்பு அவரிடம் உண்டாயிற்று. அது முறுக முறுக இந்த நிலை வந்திருக்கிறது. அந்த அன்பு - எப்படி, வந்தது? அதுவும் அன்னையின் அருளாலே அமைந்ததுதான். உள்ளம் உருகும் அன்பு எளிதில் வகுவதில்லை. எத்தனை நூல்களைக் கற்ருலும் அறிவு