பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவாப் பேறு 179

எத்தகைய சித்தி பெற்ருலும் மனத்தை அடக்கும் சித்திக்கு நிகர் இல்லை; -

சினம் இறக்கக் கற்ருலும் சித்தியெல்லாம் பெற்ருலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே”

என்பார் தாயுமானவர். மனம் ஒன்றுபட்டுத் தியான சமாதி அடைந்தால் மனேலயம் ஏற்படுகிறது. அதில் முறுகி என்று நிஷ்டானுபூதிச் செல்வராக மாறினல் மனே நாசம் உண்டாகிவிடும். +. -

அலைகின்ற மனத்துக்கு ஒரு பற்றுக்கோடாக இறைவியின் தியானத்தை வைத்துப் பழகவேண்டும். அவள் திருவுருவம் நன்ருகப் புதியும்போது மற்றன வெல்லாம் தோன்ருமல் மறையும். இந்தச் சமாதிநிலை யாருக்குக் கைகூடுகிறதோ அவருக்கு இனிப் பிறவி இல்லை. இப்போது உயிர் வாழ்கின்ற உடம்பாகிய குடிசை அசுத்தமயமானது. குடரும் நினமும் குருதியும் சேர்ந்து அமைந்த அழுக்குக் குடிசை இது. இறைவியிடம் அன்பு செய்து வாழ்கிறவருக்கு இதனிடம் அருவருப்புத் தோன்றும். அவர்கள் இந்தக் குரம்பையில் வாழும் வாழ்வை விட்டு இறைவியின் திருவடியிலே வாழும் வாழ்வை விரும்புவார்கள். தியானம் செய்து செய்து நிஷடை கைகூடியவர்களாய் இடர் தவிர்த்து இப்பிறவியின் வாழ்நாளைப் போக்கிப் பிறகு என்றும் குன்ருத நிரதிசய இன்பத்தைப் பெறுவார்கள் பேரின்ப வாழ்வாகிய வீட்டில் நிலவுவார்கள், மறுபடியும் தசையும் குருதியும் உள்ள அழுக்குடம்பில் புகமாட்டார்கள். பிறத்தலும் இறத்தலும்

அவர்களுக்கு இல்லை. - -

இவற்றை எல்லாம் அபிராமிபட்டர் சொல்கிருர்,