பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 - மாலை பூண்ட மலர்

சுடரும் கலைமதி துன்றும்

சடைமுடிக் குன்றில்ஒன்றிப்

படரும் பரிமளப் பச்சைக்

கொடியைப் பதித்துநெஞ்சில்

இடரும் தவிர்த்திமைப் போதிருப் பார்பின்னும் எய்துவரோ

குடரும் கொழுவும் குருதியும்

- தோயும் குரம்பையிலே?

(ஒளிவிடும் கலைகளையுடைய பிறை பொருந்திய சடை என்னும் காட்டோடு கூடிய திருமுடியைப் பெற்ற மேருமலை போன்ற சிவபெருமானேடு இணைந்து பழகு கின்ற ஞானமணம் உள்ள பசுங்கொடியாகிய அபிராம வல்லியைத் தம்முடைய நெஞ்சில் பதித்துத் தியானம் செய்து, அதனல் துன்பம் நீங்கி இமைக்கும் கணப்போ தேனும் நிஷ்டானு பூதி நிலையில் இருப்பவர்கள் குடலும் நிணமும் இரத்தமும் சேர்ந்த குடிசையாகிய உடம்பில் மீட்டும் வந்து அடைவார்களா?)

கலைமதி என்ருலும் இங்கே பிறையைக் கொள்ள வேண்டும். இறைவனக் குன்முக உருவகம் செய்ததனல் சடையைக் காடாகவும் முடியைச் சிகரமாகவும் கொள்ள வேண்டும்; ஏகதேச உருவகம். அம்பிகை சிவபெருமா னிடத்தினின்றும் பிரியர்மல் நிற்றலால் ஒன்றிப் படரும்’ என்ருர். இறைவனோடு ஒன்றிப்படரும் நிலையில் அம்பிகை

பச்சை நிறம் படைத்திருப்பாள். அம்பிகைக்குச் 'சியாமாபா' (486) என்று ஒரு திருநாமம் உண்டு. சியாமம் என்பது ஒருவகைப் பச்சை நிறம். அம்பிகையை,

"பங்காயோர், தமனிய மலைபடர் கொடியென வடிவு தழைந்தாய் (மீளுட்சியம்மை பிள்ளைத் தமிழ், செங்கீரை) என்று பாடுவார் குமரகுருபர முனிவர். -