பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவாப் பேறு . 181

அம்பிகை வேருென்றையும் எண்ணுமல் தன்னையே தியானித்து வாழும் பக்தர்களுடைய உள்ளத்தில் விருப்பத் துடன் நிலவுபவள். தாய்மையான மானஸ்வாவியைப் போன்ற அந்த உள்ளத்தில் அவள் அன்னம்போல இருப்பாள். பக்த மானஸ் ஹம்ஸிகா' (372) என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. அப்பெருமாட்டியின் தியானத்தால் அன்பர்களுடைய உள்ளம் தாபங்கள் அற்றுக் குளிர்ச்சி அடையும். பக்தர்களுடைய உள்ள மாகிய மயிலுக்கு அவள் மேகம்போல இருந்து இன்பத்தைத் தருவாள் என்று அவளுடைய திருநாமம் ஒன்று குறிப்பிடுகிறது; பக்த சித்த கேகி கநாகநா (747).

பதித்தலாவது தளர்ச்சியின்றித் தெளிவாக உருக் காணும்படி தியானித்தல். இடரும் தவிர்த்து' என்ற தொடரில் இடர் தவிர்த்தும் என்று உம்மையை மாற்றிக் கூட்டுக. பதித்தும் தவிர்த்தும் என்று பொருள் செய்க. இமைப்போது இருப்பார் என்ருலும் அவ்வாறு இருப்பவர் கள் பின்னும் தொடர்ந்து இருக்கும் ஆற்றலைப்பெறுவார் என்பதையும் நினைக்கவேண்டும். பின்னும் என்றது இப்போது பெற்ற பிறவியை அல்லாமல் இதன் பின் வேறு பிறவி இல்லை என்பதைக் குறித்தது. எய்துவரோ என்பது எய்தமாட்டார்கள் என்னும் பொருளைத் தந்தது.

குச்சிகளாலும் கீற்றுக்களாலும் வேய்ந்து காற்று, தீ, மழை ஆகியவற்ருல் எந்தச் சமயத்திலும் பழுதுபட்டு அழியும் நிலையில் இருப்பது குரம்பை. ஆதலின் பிணி முதலியவற்ருல் பழுதுபட்டு இறக்கும் உடம்பைக் குரம்பை யாக உருவகித்தார். என்றும் மாருத சிறப்புடைய வீட்டைப் பெறுவாராதலின் குரம்பையில் புகார். பெரிய மாளிகையைப் பெற்றவன் மீட்டும் குடிசைக்கு வராதது போல அமைந்தது இந்த நிலை. அம்பிகையைத் தியானித்து