பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல் என்பாய்

உயிர்களுக்கு உண்டாகும் துன்பங்களில் மிகப் பெரியவை பிறப்பும் இறப்பும். பல பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து மீட்டும் இறந்து இறந்து செல்லும் இந்தத் தொடர் என்று நிற்கிறதோ அன்றுதான் உயிர் மோட் சத்தை அடைகிறது. பிறவியைப் பெற்றவர்கள் மீட்டும் இங்கே வந்து பிறவாமல் இருப்பதற்கு ஏற்ற முயற்சியைச் செய்யவேண்டும். வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை' என்று திருக்குறள் கூறும். பெரியவர்கள், இனிப் பிறவாமல் அருளவேண்டும் என்றும். இறக்கும்போது துணை நிற்கவேண்டும் என்றும் இறைவனே வேண்டுவார்கள்.

நாம் பிறந்துவிட்டோம். இனிமேல் நம்மை எதிர்நோக்கி இருப்பது இறப்பு. இறப்புத் துன்பத்தை நினைக்கும்போது யாருக்கும் உள்ளம் குலையும். ஆனல் அந்த நினைவு நெஞ்சில் நிலைப்பதில்லை. ஆன்ருேர்கள், எவ்வாறேனும் மரணத் துன்பத்தை அடையாமல், கூற்றுக்கு. ஆளாகாமல் இறைவன் திருவடியை அடையவேண்டும் என்று பிரார்த் திப்ப்ார்கள். யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன்' என்று மணிவாசகர் பாடுகிரு.ர். இவ்வாறே மரணத்தை எண்ணி ஆழ்வார்களும் நாயன்மார் களும் இரங்கியிருக்கிரு.ர்கள்.

உடம்பைப் பெற்றவர்கள் எப்படியும் இறக்கத்தான் வேண்டும். ஆல்ை அந்த இறப்பில் இரண்டு வகை உண்டு. புராணங்களில் சில வகையான கதைகள் வரும். பாவம் செய்த ஒருவன் இறந்த பிறகு அவனை யமதூதர்கள் அழைத்துக்கொண்டு சென்ருர்கள் என்றும், புண்ணியம்