பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல் என்பாய் 185

சரீரம் என்று பெயர் பெறும். சொர்க்கம், நரகம் என்று சொல்லுகின்ற இன்ப துன்ப அநுபவங்களே அந்தச் சூட்சும சரீரமே அநுபவிக்கிறது.

இன்பதுன்பம் என்ற இரண்டும் மனத்தைச் சார்ந்தவை. சரீரத்தின் தொடர்பு இல்லாமல் இன்பதுன்ப அநுபவம் இராது. எந்தச் சரீரமாக இருந்தாலும் இன்பதுன்பம் அதுபவிக்க அதுவே கருவியல் இருக்கிறது. உயிர்கள் சரீரங்களின் தொடர்பு பெற்று நிற்கும் வரையிலும் இன்பதுன்ப சிது'இத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும். ஒளியும் நிழலும் போல இன்பமும் துன்பமும் இனமாக அமைகின்றன. சரீரத்தை விட்டு உயிர் எங்கும் பரந்த பரமாத்மாவோடு கலக்கும்போது அது என்றும் மாருத *"சித்த்தை அடைகிறது. அதையே ஆதிமானந்தி என்று சொல்வார்கள். சரீரங்களின் தொடர்பின்றி விடுதலை பெற்ற ஆத்மா பரமாத்மாவோடு இரண்டற க்கலந்துவிடும். அங்கே இன்பம் இல்ஆல. துன்பம் இல்லை. வெறும் ஆனந்தமே நிற்கும். முன்பு சொன்னதுபோல இன்பம் என்பதும் துன்பம் என்பதும் இந்திரியங்களின் வாயிலாக மனத்தால் நுகரப்படுபவை. ஆனந்தமோ சரீரங்களின் தொடர்பே இன்றித் தனியாக நிற்கும் ஆத்மா அநுப விப்பது. ஆத்மா பரமாத்மாவோடு ஒன்ருகிய நிலையில் விளைவது அது. . -

இறைவனுடைய திருவருள் பெற்றவர்கள் இந்த உடம்பை விடும்போது மற்ற உடம்புகளின் தொடர்பையும் விடுத்து இறைவைேடு கலந்துவிடுவார்கள். அவர்களுக்கு இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தம் கிடைக் கிறது. மற்றவர்கள் இறந்தவுடன் இப்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனுக இன்ப துன்பங்களை அதுப விக்கிருர்கள். இந்தப் பிறப்பின் அநுபவங்களைச் சுக துக்கம் என்று சொல்கிருேம். மரணமடைந்த பிறகு