பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i88 மாலை பூண்ட மலர்

உயிர் இருக்க முடியாது. அந்தக் காலத்தை நாம் அறியா விட்டாலும் மரணத்தை விளைவிக்கின்ற காலன் அறிவான். உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் காலம் இன்னதென்பதை அவன் அறிவானதலால் அவனுக்குக் காலன் என்ற பெயர் வந்தது. உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்தலால் கூற்று என்ற பெயரும் அமைந்தது. உடம்புக்குள் உயிர் சில காலம் குடி இருக்கிறது. இந்த உடம்பு நிரந்தரமாக இருக்கும் வீடு அன்று. வேற்றுாரில் அரசன் பாளையம் இறங் கில்ை அங்கே பல காலம் இருக்கமாட்டான். அது போலத் தான் உயிர் உடம்புக்குள் இருக்கிறது. எப்போதும் சொந்த மாகக் கொண்டு நிலையாக வாழும் இடத்துக்குப் புக்கில் என்றும், சில காலம் குடி இருக்கும் வீட்டுக்குத் துச்சில் என்றும் பெயர் வழங்கும். உயிருக்கு நிலையான வீடு ஒன்றும் இல்லை. இறைவன் திருவருள் இருந்தால் முத்தி யாகிய நிலையான வீட்டில் இருக்கலாம்.

"ஒருபூதரும் அறியாத் தனிவீட்டில் உரையுணர்வற்று

இருபூத வீட்டில் இராமல் என்ருன்’’

என்று அருணகிரிநாதர் கூறுகிரு.ர். இறைவன் திருவருள் கிடைத்தால் என்றும் மாருத நிலையான வீட்டில் வாழலாம். இல்லாவிட்டால் வாடகை வீட்டில் மாறி மாறி வாழ வேண்டியதுதான். மாறி மாறிப் பிறக்கும் உயிரின் அவல நிலையைக் கண்டு. - -

'புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு" என்று திருவள்ளுவர் இரங்குகிருர்,

எனவே, குறிப்பிட்ட நாள் வரைக்கும் இந்த உடம்

பாகிய வாடகை வீட்டில் குடி இருக்கும் உயிர் அந்த நாள் வந்தவுடன் இடத்தைக் காலி செய்து விடும். எத்தகைய