பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல் என்பாய் 189

ஆற்றலுடையவர்களானலும் இந்த நியதியை மாற்ற (ip 14-ti ffTjf.

'இழைத்தநாள் எல்லை இகவா பிழைத்தொரீஇக்

கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கு இல்லை'

என்பது நாலடியார். அந்த நர்ள் வரும்போது உண்டாகும் துன்பங்களை எண்ணில்ை நம்முடைய குலே குமுறும். அபிராமிபட்டர், அந்த நாளில் வந்து காப்பாய்’’ என்று விண்ணப்பித்துக்கொள்கிருர். ஆழ்வாரும், அப் போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்' என்று பாடுவார்.

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெம் கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது வ8ாக்கை அமைத்து அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்

என்பது அவர் பிரார்த்தனை.

"தாயே. இந்தக் குடிசையாகிய உடம்பைச் சேர்ந்து குடியிருக்கப் புகுந்த உயிரானது கொடிய யமனுக்கு இன்ன காலத்தில் நீ வரவேண்டும் என்ற விதியை அனுசரித்து வரையறுத்த கால எல்லையை அணுகி வருந்தும் அந்த வேளையில், நின்னுடைய வளைகளை அணிந்த கைகளை அமைத்து அபய முத்திரை காட்டி அரம்பையும் அவளே அடுத்த வேறுபல யோகினிகளும் உன்னைச் சூழ்ந்துவர நீ எழுந்தருளி வந்து, நீ பயப்படாதே’ என்று கூறி என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று அவர் வேண்டுகிரு.ர்.

கை அமைத்தலாவது அஞ்சேல் என்ற குறிப்பைக் கையில்ை காட்டுதல்; ' தோன்றும் திதியமைப்பில்' என்று இந்த அபயமுத்திரையை அமைப்பு என்று உண்மை விளக்கம் கூறும். அம்பிகைக்கு ரம்பாதி வந்திதா' (லலிதா.