பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 மாலை பூண்ட மலர்

741) என்பது ஒரு திருநாமம். ஆகையால் அன்னை எப்போ தும் ரம்பை முதலிய அணங்கினர் சூழ்ந்து ஏவல் செய்யச் சித்தராக நிற்க எழுந்தருளுவாள். ஏதேனும் ஒரு சிறிய அதிகாரம் உடையவராக இருந்தாலே எப்போதும் நாலு பேருடன் வருவது உலகியல், அதிகாரமும் உபகாரமும் இணைந்தவர்களை மக்கள் சூழ்ந்துகொண்டே இருப்பார்கள். யாவருக்கும் தலைவியும் எல்லாவற்றையும் அருளுபவளு மாகிய அம்பிகையைச் சுற்றிப் பலர் இருப்பது வியப்பு அன்று. அழகும் ஏவல் புரியும் பாங்கும் உடைய அணங்கு கள் பலர் அம்பிகையின் குறிப்பறிந்து தொண்டாற்றக் காத்து நிற்பார்கள். ஆதலின், அரம்பையடுத்த அறிவையர் சூழவந்து' என்ருர். அஞ்சல் என்பாய்' என்பது, 'அஞ்சாதே என்று திருவாய் மலர்ந்தருளுவாயாக’ என்று மட்டும் பொருள் தருவதன்று. அஞ்சாதே என்று கூறி யமபயத்தினின்றும் என்னைக் காப்பாற்றியருளவேண்டும்’ என்றே பொருள் கொள்ள வேண்டும். ஏன் என்று கேட் பவர் இல்லை' என்ருல் அப்படி ஒருவர் கேட்ட அளவில் நிற்க வேண்டும் என்ற விருப்ப்த்தைக் குறித்ததாகாது. உபகாரம் செய்பவர் இல்லை என்பதையே அது குறிக்கும். அது போலவே இங்கும் கொள்ளவேண்டும்.

அம்பிகை யம பயத்தை நீக்குவாள் என்பதை, ம்ருத்யு தாரு குடாரிகா (749) என்ற அவள் திருநாமம் காட்டும். -: யமனென்னும் மரத்துக்குக் கோடாரிபோல இருப்பவள்” என்பது அத்திருநாமத்தின் பொருள். பலவகையான ஏவலர்களுடனும் தூதர்களுடனும் யமனுடைய காரியா லயம் விரிவாக ஆலமரம்போலப் படர்ந்து நிற்கிறது. கோடானுகோடி உயிர்களைக் கொண்டுவரவேண்டும் அல்லவா? அப்படி விரிவாக இருந்தாலும் ஆணி வேரிலே கோடாரி போடுவதுபோல அம்பிகை செய்வாள். யமபட ரெனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதி: