பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல் என்பாய் 191

தானேன்று கொளுங்குயில்’’ (தேவேந்திர சங்க வகுப்பு) என்பர் அருணகிரிநாதர்,

இனி அம்பிகையின் இனிமையை எண்ண வருகிருர் அபிராமிபட்டர். வன்மையான யமனுடைய கொடுந் துன்பத்தை அகற்றும் அருள் வலிமையையுடைய பிராட்டி மென்மையானவள்; மெல்வியலார் சூழ வருபவள்: இனிமையே மயமான இசை அவளுட்ைய உருவமே. சங்கீதத்தின் அதிஷ்டாள தேவதையாகிய சங்கீத சியா மளை அம்பிகையின் அம்சமே. ஆகவே,

நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற

நாயகியே!

என்று போற்றுகிரு.ர். ஏழு ஸ்வரங்களை ஒட்டி நிற்கும் இசையின் வடிவாக நிற்கின்ற பெருமாட்டியே என்கிரு.ர்.

குரம்பை அடுத்துக் குடிபுக்க

ஆவிவெங் கூற்றுக்குஇட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்

போது வளைக்கைஅமைத்து அரம்பை அடுத்த அரிவையர்

சூழவந்து அஞ்சல்என்பாய்: நரம்பை அடுத்த இசைவடி

வாய்கின்ற நாயகியே!

(யாழின் சுரஸ்தானங்களைப் பொருந்தி அவற்ருல் எழும் இசையின் வடிவாக நின்ற பெருமாட்டியே! இந்த உடம்பாகிய குடிசையைச் சார்ந்து சில காலம் இருப் பதற்குக் குடியாகப் புகுந்த எளியேன் உயிர், வெம்மை யான கூற்றுவனுக்கு விதியால் வகுக்கப்பட்ட கால எல்லையை அணுகி வருந்தும் அந்தச் சமயத்தில் அரம்பையும், அவளோடு அடுத்து வரும் பிற தேவமகளிரும்