பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மாலே பூண்ட மலர்

கின்றன. திருவாரூர்ப் பெருமானுக்கு அமைந்த முசுகுந்த சகசிரநாமம் போன்றவை அவை. -

இவ்வாறு அமைந்த திருநாமங்கள் யாவும் பக்தர்கள் பலகாலம் சொல்லிச் சொல்லி இன்புறுவதற்காக அமைத் தவை. அருளாளர்கள் இறைவனைத் துதிக்கும்போது அவனுடைய திருநாமங்களைத் தம்முடைய பாடல்களில் பலவாறு இணைப்பார்கள். வழக்கமாக உள்ள சகசிர நாமங்களில் காணுத திருநாமங்களையும் அவர்களுடைய திருவாக்கில் காணலாம். இறைவனுடைய உருவங்கள் எப்படிக் கணக்கில் அடங்காதனவோ, அப்படியே அவனு டைய திருநாமங்களுக்கும் எல்லே இல்லாமல் வளர்ந்து கொண்டே வரும். -

இறைவியின் திருநாமங்கள் பற்பல. லலிதா சகசிர நாமம், லலிதா த்ரிசதி, லலிதா அஷ்டோத்தரம் என்பவை அன்னையின் திருநாமங்களின் வரிசைகளே. அபிராமி பட்டர் பலகாலம் லலிதா சக சிரநாமத்தைப் பாராயணம் செய்தும் அம்பிகையின் பூசையில் அருச்சனை செய்தும் வழி பட்டவர். அபிராமி அந்தாதியில் அந்தத் திருநாமங்கள் பலவற்றை இணைத்திருக்கிருர் . அம்பிகையின் அருட் செயல்களையும் பராக்கிரமத்தையும் வெவ்வேறு வகையில் கூறும் அபிராமிபட்டர் இப்போது எம்பெருமாட்டியின் திரு நாமங்கள் சிலவற்றை வரிசையாகச் சொல்லி இன்புற எண்ணுகிருர். அந்தத் திருநாமங்கள் அவளுடைய இயல்பு களைப் புலப்படுத்தும்தொடர்களே. ஆதலின் அந்த நாமங் களை வைத்துப் பாடல்களைப் பாடும்போது அவற்ருல் குறிக்கப்பெறும் இயல்புகள் அவருடைய நெஞ்சில் விரிவாக நின்று இன்பம் தந்திருக்க வேண்டும். இப்போது அம்பிகையின் பதினொரு நாமங்களை ஒரே பாட்டில் அடுக்கிக் கூறுகிருர் . - - ..