பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணமே அரண் 195

அம்பிகை எல்லாப் பொருளுக்கும் தனித் தலைவி: எல்லா உயிர்களுக்கும் மேலான பெருமாட்டி. அவளைச் சர்வேசுவரி (202) என்றும். பரதேவதா 1369) என்றும் லலிதா சகசிரநாமம் சொல்லுகிறது. தேவர்களுக்குத் தலைவியாக இருப்பதனால் சுரநாயிகா (463) என்றும் பரவு கிறது. இவற்றையெல்லாம் எண்ணிய பட்டர் இந்தப் பாடலே, -

நாயகி

என்று தொடங்குகிருர், இசைவடிவாய் நின்ற நாயகியே’ என்று சென்ற பாட்டில் முன்னிலையாக விளித்த ஆசிரியர் இப்போது படர்க்கையாகப் பரவப் புகும்போது அந்த அந்தத்தை ஆதியாக வைத்து நாயகி என்ருர். ->

அம்பிகை எல்லாத் தொழிலையும் செய்யும் மகாசக்தி யாக விளங்குகிருள். படைப்பு முதலிய பஞ்ச கிருத்தியங் களும் அவள் திருவருளால் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தொழிலையும் ஒவ்வோர் உருவத்தில் இருந்து நடத்துகிருள். அந்த வகையில் பிரமகை நான்கு முகங்களோடு இருந்து படைப்புத் தொழிலை ஆற்றுகிருள். அதனால் அவளேச் சிருஷ்டி கர்த்ரீ (264) என்றும் ப்ரஹ்மரூபா (265) என்றும் லலிதா சகசிரநாமம் கூறுகிறது. ஆதலால் அப்பெரு மாட்டியை,

நான்முகி

என்று பாராட்டுகிருர் ஆசிரியர், சுவாதிஷ்டான சக்கரத் தில் ஆறிதழ்த் தாமரையில் மஞ்சள் நிறத்தோடும் நான்கு முகங்களோடும் காகினி என்ற திருவுருவத்தில் அம்பிகை இருப்பதாகக் கூறுவர். சதுர்வக்த்ர மனோஹரா (505) என்று லலிதா சகசிரநாமம் சொல்கிறது. எனவே சுவாதிஷ்டான சக்கரத்தில் இருக்கும் பெருமாட்டியே என்றும் பொருள் கொள்ளலாம். - -