பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணமே அரண் 199.

அடுத்தபடி ஆசிரியரின் நினைவில் வருகிற திருநாமம்,

மாதங்கி

என்பது. மதங்க முனிவரின் குமாரி என்பது ஒரு பொருள். இசைபாடும் மதங்கர் குலத்துப் பெண்ணுகத் தோன்றி யமையின் அத்திருநாமம் வந்தது என்று கொள்ளுவதும் பொருந்தும்; 'மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி (70) என்று இவ்வாசிரியரே பின்பு கூறுவார்; மாதங்கி வேதஞ்சொல் பேதை நெடுநீலி’’ என்பது திருப்புகழ்.

இவ்வாறு அம்பிகையின் பதினெரு திருநாமங்களே ஆசிரியர் அடுக்கிச் சொன்னர். அந்தத் திருநாமங்கள் எம்பெருமாட்டியின் புகழுக்குரிய அடையாளங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அன்னையின் சிறப்பைப் புலப்படுத்துகிறது. அத்தகைய பெருமையும் அருமையும் உடமையினுல்தான் அன்னைக்குப் பல திருநாமங்கள் 'உண்டாயின.

என்று ஆய கியாதி உடையாள்

சரணம் அரண்நமக்கே.

எல்லாம் காரணப் பெயர்கள், மக்கள் ஒரு காரண்மும் இன்றி வைத்துக் கொள்ளும் பெயர்கள் போல் அல்லாமல் இத்தகைய நாமங்கள் யாவும் தக்க காரணங்களை உடையனவாய், பொருள் நிரம்பியனவாய், பக்தர்கள் கூறக் கூற அவர்களுடைய நாவில் இனிப்பனவாய், பொருளை எண் ண எண்ணக் கருத்தில் இனிப்பனவாய் இருக்கின்றன. இத்தகைய நாமங்களால் புகழ்பெற்ற பெருமாட்டியின் திருவடிகள் நமக்கு எல்லா வகையான துன்பங்களையும் அச்சத்தையும் போக்கிப் பாதுகாக்கும் அரணமாக உள்ளன என்று கூறி இந்தப் பாடலை முடிக்கிருர் அபிராமி பட்டர்.