பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்! 2i.

மாக வந்து அடிக்கவேண்டும். அப்போதுதான் நம் நெஞ்சிலே படலம் படலமாகச் சேர்ந்துள்ள அழுக்குக் கரையும். அப்படி ஒரு புனல் உண்டா? உண்டு; அதுதான் அம்பிகையின் அருளாகிய புனல். அது கரையை உடைத்துக்கொண்டு பாயும் கடல்போலப் பெருக் கெடுப்பது. அருள் வெள்ளம் என்று சொல்வார்கள். அந்த அருட்புனலால் அம்பிகை நெஞ்சில் உள்ள அழுக்கை எல்லாம் துடைத்தாளாம்.

கெஞ்சத்து அழுக்கை

அருட்புனலால் துடைத்தன; சுந்தரி: கின் அருள் ஏதென்று சொல்லுவதே!

அவள் அருளாகிய புனல் எத்தனை அழுக்கு இருந் தாலும் அதைப் போக்கிவிடும் ஆற்றல் உடையது. அந்த அழுக்கு நமக்குப் பெரிய பாரமாக இருக்கிறது; பிறவி களுக்குக் காரணமாக இருந்து தொல்லை கொடுக்கிறது. ஆனல் அம்பிகை மிக எளிதில் அதைப் போக்கிவிடு கிருளாம். முகம் பார்க்கும் கண்ணுடியில் சிறிது அழுக்கு இருந்தால் எளிதில் கையால் துடைத்துவிடுவதுபோல, துடைத்து விடுகிருளாம். இது எத்தகைய ஆச்சரியம்!

அவள் அழகி; சுந்தரி, அழகியர் சூழ நிற்கும் பேரழகி. அவள் பழகும் இடம் யாவும் அழகியவை. அவளுக்கும் அழுக்குக்கும் நெடுந்துாரம். அவள் எங்கே சென்ருலும் அங்கே உள்ள அழுக்கு மறைந்து போகும்: அழகு பொங்கும். சுண்ணும்புக்கல்லில் நீரை விட்டால் அது மலர்ந்து வெளுப்பது போலவே, அவள் அருட்புனல் பாயும் இடங்கள் அழுக்கு நீங்கி அழகு பெறும்.

நம் உடம்பு அழுக்கானது;

'அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்'