பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மாலை பூண்ட மலர்

என்பது சுந்தரர் திருவாக்கு. நம் மனமோ அதைவிட அழுக்கானது; . .

'அழுக்கு மனத்து அடியேன்'

என்பார் மாணிக்கவாசகர்.

இந்த அழுக்குகள் போக அம்பிகையின் அருளென்னும் கங்கை பாயவேண்டும். அபிராமிபட்டருக்கு அருள் வெள்ளம் பாய்ந்தது; அதல்ை அவர் நெஞ்சத்து அழுக் கெல்லாம் போயின; அதனல் வேறு ஒரு கடைப்பிடியும் இல்லாமல் இறைவியின் திருவடிகளைச் சூடும் பணி ஒன்றையே செய்தார்; அதனுல் உள்ளம் உருகும் அன்பு உண்டாகி வளர்ந்தது; அதனல் இனிப் பிறவியே இல்லை என்ற முக்தி நிலையை அடைந்தார். இது காரண காரிய முறையில் வைத்துப் பாடுகிருர் அபிராமிபட்டர். -

உடைத்தன வஞ்சப் பிறவியை: உள்ளம் உருகும் அன்பு படைத்தன. பத்ம பதயுகம்

சூடும் பணி எனக்கே அடைத்தன; நெஞ்சத்து அழுக்கைஎல்

லாம்.கின் அருட்புனலால் துடைத்தன; சுந்தரி, கின் அருள்

ஏதென்று சொல்லுவதே!.

(பேரழகியே, வஞ்சகமாக யான் அறியாவண்ண்ம் வந்து என்னத் துன்புறுத்தும் பிறவிக்குவையை உடைத்து விட்டாய் அதற்குமுன் அடியேனுடைய உள்ளம் உருகுவ தற்குக் காரணம்ான சிறந்த அன்பை அடியேன் பெறும்படி செய்தாய்; அது உண்டாவதற்குமுன் நின்னுடைய தாமரை மலரைப் போன்ற இரண்டு திருவடிகளை எளியேன் தலையில் அணிந்து வழிபடும் வேலையையே எனக்கு