பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்! 23

நியமித்தாய்; அதற்குமுன் ஏழையேனுடைய நெஞ்சிலுள்ள பல வகையான அழுக்குகள் எல்லாவற்றையும் நின் அருளாகிய தூய தண்ணீரால் துடைத்து விட்டாய்; இவ்வளவுக்கும் காரணமாய் நின்று உதவிய நின் திருவருளே எத்தகையதென்று சொல்வது!

உடைத்தல் - பொடியாக்குதல். வஞ்சம் என்பது நெருங்கிப் பழகுபவருக்கும் தெரியாத கொடுமைப் பண்பு. படைத்தனை-உண்டாக்கினுய், யுகம்-இரண்டு. சூடுதல்தலையில் அணிதல்; தலையால் வணங்குவதைக் குறித்தது. உபலட்சணத்தால் முக்கரண வழிபாட்டையும் கொள்ள வேண்டும். பணி - உத்தியோகம். பணியே எனக்கு அடைத்தன; அடைத்தல்-வரையறுத்தல்; இதனையன்றி வேறு வேலை செய்யவேண்டாம் என்று நியமித்தல், அருட் புனல்-பெருங்கருணை வெள்ளம். துடைத்தனே என்ருர், எம்பெருமாட்டி எளிதில் செய்தாள் என்ற குறிப்புத் தோன்ற அழுக்கின்றி நின்ற அழகுப் பிராட்டியாதலின். சுந்தரி என்ருர். இவ்வளவுக்கும் மூலகாரணமாக நிற்பது நின் அருள் என்றபடி. அதன் வலிமையையும், எளிதாந் தன்மையையும் எவ்வாறு சொல்ல இயலும் என்று அதிசயிக் கிரு.ர்.1 -

அம்பிகையின் திருவருள் இருந்தால் சித்த சுத்தியும், உபாசன பலமும், முறுகிய பக்தியும், ஜீவன் முக்தியும் படிப் படியாக உண்டாகும் என்பது கருத்து. - .

இது அபிராமி அந்தாதியில் உள்ள 27-ஆவது பாடல்.