பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மையும் மறுமையும் 25

வாகதீச்வரி (640) என்ற திருநாமங்களை அவள் பெற்றிருக்கிருள்.

நடமாடும் துணைவராகிய நடராசப் பெருமானுடன் அவள் ஒன்றி நிற்கிருள். அவளும் நடமாடுவதுண்டு. அதல்ை அவளுக்கு நடேச்வரி (734) என்ற திருநாமம் அமைந்தது. கற்பகத்தோடு காமவல்லி என்னும் கொடி ஒன்றித் தழுவி நிற்பதுபோல எம்பெருமாட்டி இருக், ருள். கொடிபோன்ற அவளைச் சிவகாமவல்லி என்று பாராட்டு கிருேம். நடராசப் பெருமானுடன் நின்று விளங்குபவள் அவள். அந்தத் திருநாமத்தை நினைந்தே இங்கும் பூங்கொடியே என்ருர். -

அம்பிகை தெய்விக மணம் கமழும் திருமேனியை உடையவள்; ஞான மணம் கமழும் திருக்கோலம் பெற்றவள். திவ்ய கந்தாட்யா" (631) என்று லலிதா சகசிர நாமம் கூறுகிறது. இவ்வாசிரியர், 'பரிமள யாமளைப் பைங்கிளியே' (15), "சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடி' (48) என்று வேறு இடங்களில் பாடுவார்.

சொல்லும் பொருளும் என கடம் ஆடும்

துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே.

இவ்வாறு அன்னையைத் துதித்தவர் அவளுடைய அடியார் பெறும் பேற்றைச் சொல்ல வருகிரு.ர். அவள் இம்மை மறுமைப் போகங்களை வழங்குபவள் என்பதை உணர்த்துகிரு.ர். -

அவளுடைய திருவடி தாமரை மலரைப் போன்றது. தாமரை மலரோ வாடுவது. இந்தத் திருவடி என்றும் வாடாதது; அப்பொழுது அலர்ந்த புதிய மலரைப் போலவே எப்போதும் விளங்குவது மலருக்குரிய