பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மையும் மறுமையும் - 27

முடிசூட்ட முயன்ருன். ஆனல் கதை வேறு விதமாக முடிந்தது. i

இறைவியின் பதம்தொழும் அடியவர்களுக்கும் முறை யாக எந்த எந்த நிலை வரவேண்டுமோ அவையெல்லாம் வரும். சிறந்த ஐசுவரியத்தை உடைய அரசராக வாழ்ந்து, பிறகு அவற்றை விட்டுத் தவம் புரிவார்கள். அரச போகத்தை நுகரும்போது அன்னையை மறவாமல் வாழ்கிற வர்கள் ஆகையால் எந்தச் சமயத்திலும் அந்த வாழ்வைத் துறக்கும் மனநிலை அவர்களுக்கு உண்டு. ஆகவே , அரசைப்பெற்று நன்ருக வாழ்ந்து, உரிய காலத்தில் அந்த வாழ்வில் பற்றை ஒழித்துத் தவவாழ்வை மேற்கொள் வார்கள். அந்தத் தவவழியிலே செல்லுவார்கள்.

அவ்வாறு படிப்படியாக மேல் ஏறும் அவர்களுக்கு இம்மை வாழ்வு மாறி மறுமை வரும்போது என்றும் மங்காத பேரின்ப வாழ்வு கிடைக்கும். அதுவே முக்தி; வீடு; சிவலோகம்.

தொழும் அவர்க்கே அழியா அரசும்

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே. எம்பெருமாட்டியின் அருள் இல்லாமல் வெறும் புண்ணியப் பயணுக அரசு கிடைத்தால் அது விரைவில் அழிந்துவிடும். அருள் பெற்றவர்களுக்கோ பிறரால் அழியாத அரசு கிடைக்கும். அவர்களாகவே விட்டு நீங்குவார்களேயன்றி, அதுவாக அவரிடத்தினின்றும் திரு.ழில்ாது. | . .

அவ்வாறே அவள் துணையில்லாமல் தம் முயற்சியால் தவநெறியில் செல்பவர்கள் இடையே தடுமாறுவார்கள்; . வழுவிப்போவார்கள்; தவத்தைக் கொண்டு செலுத்த முடி யாமல் திண்டாடுவார்கள். அதனுல்தான்,