பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் ஆனவள்

உலகத்தில் மனிதன் தான் செய்யும் காரியங்கள் யாவும் தான் நினைத்தபடியே நிறைவேறவேண்டும் என்று ஆசைப்படுகிருன். ஆனல் அதற்கு ஏற்ற ஆற்றல் அவனுக்கு இருப்பதில்லை. மனத்திண்மை இருந்தால் எண்ணியவற்றை எண்ணியபடி நிறைவேற்றலாம். -

'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்'

என்பது திருக்குறள். மன ஒருமைப்பாடு இல்லாதவருக்கு மனத்திண்மை உண்டாவது அரிது. மனத்தை ஒருமுகப் படுத்தும் பெரியோர்கள் மனத்திண்மை உடையவர்களாக இருப்பார்கள். மனத்தை ஒருமுகப்படுத்துவது தியானம்; அது தவத்தைச் சார்ந்தது. தவ முனிவர்கள் மனத்தை அடக் கும் வல்லமையுடையவர்கள். அதனுல் அவர்களிடம் பல அற்புத ஆற்றல்கள் தோன்றும். அவற்றைச் சித்திகள் என்று சொல் வார்கள். அவை பலவானுலும் தலைமையாக எண்வகைச் சித்திகளைச் சொல்லுவார்கள். "அஷ்டமஹா சித்திகள்' என்று அவை பெயர்பெறும்; அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், ஈசித்வம், வசித்வம், என்பவை.

இந்தச் சித்திகளாக இருப்பவள் அம்பிகை. மகாசித்தி என்ற திருநாமத்தை உடையவள் அவள் (லலிதா சக.224.)

சித்திகளையுடைய தவமுனிவர்களைச் சித்தர்கள் என்று சொல்வார்கள். பதினெண் சித்தர்கள் என்று ஒருவகையில் 'கணக்குக் கூறுவதுண்டு. கோரக்கர், மச்சேந்திர நாதர்