பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - மாலை பூண்ட மலர்

முதலிய சித்தர்கள் பலர் உண்டு. ஒன்பது கோடி சித்தர் கள் என்றும் ஒரு கணக்கு உண்டு. அவர்கள் திருவாவடு துறை என்னும் தலத்தில் இருந்து தவம் செய்து அருள் பெற்ருர்களாம். அதல்ை அந்தத் தலத்துக்கு நவகோடி சித்தவாசபுரம் என்று ஒரு பெயர் அமைந்தது.

இந்தச் சித்தர்களுக்கு உயர்ந்த சித்திகளை வழங்கி அருளுபவள் எம்பெருமாட்டி. அதனல் வித்தேசுவரி; வித்தமாதா (லலிதா. 471, 473) என்ற திருநாமங்கள் அன்னைக்கு உண்டாயின. சித்தியாக நின்றும், சித்திகளைச் சித்தர்களுக்கு வழங்கும் அன்னையாக நின்றும் அபிராமி விளங்குகின்ருள். இதை அபிராமிபட்டர் நினைக்கிரு.ர்.

சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும்

என்று துதிக்கத் தொடங்குகிரு.ர்.

அம்பிகை எல்லாச் சக்திகளுக்கும் மேற்பட்ட சக்தி: அவள் ஆற்றலுக்கு இன வேறு எங்கும் இல்லை, தெய்வங்கள் அத்தனைக்கும் தலைவியாகத் தனக்கு மேலே யாரும் இல்லாதவளாக இருப்பவள். அதனல் பராசக்தி என்ற திருநாமம் அம்பிகைக்கு உரியதாயிற்று (லலிதா.572.)

சக்தியும் சிவமும் இணைந்து ஒன்ருயிருப்பர். - சக்தி

இல்லையெனில் சிவம் இல்லை; சக்தியோடு சேர்ந்தே சிவம் தொழிற்படுகிறது.

'சிவமெ னும்பொருளும் ஆதி சத்தியொடு

சேரின் எத்தொழிலும் வல்லதாம் அவள்பிரிந்திடின் இயங்குதற்கும் அரிதாம்'

என்பது செளந்தர்யலகரி. சிவம் சக்தியாகக் தழைக்கிறது.

சிவம் கதிரவனைல் சக்தி வெப்பம்; சிவம் நீரானல் சக்தி அதன் தண்மை.