பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் ஆனவள் 31

நீரின் தண்மையனல் வெம்மையெனத் தனையகலா

திருந் தசரா சரங்கள் ஈன்ற பெண்மையுரு வாகியதன் ஆனந்தக் கொடி'

- (திருவிளையாடற்புரணம்)

என்பதல்ை இந்த உண்மை புலனுகும்.

இப்படி அபேதமாக நிற்கும் சிவமும் சக்தியும் ஒரு பொருளின் இருவேறு நிலை. பொருளும் ஆற்றலும் (Mater and energy) வெவ்வேறு என்று ஒரு காலத்தில் விஞ்ஞானி கள் கூறி வந்தனர். இப்போது இரண்டும் ஒன்றே என்ற உண்மையை அறிந்திருக்கின்றனர். சிவமும் சக்தியும் அபின்னமானவர்கள் என்று காணும் முடிந்த முடிபுக்கு இந்த அறிவு வாயிலாக இருக்கிறது. அம்பிகையே சிவமாக இருக்கிருள். சிவமூர்த்தி என்பது அந்தப் பெருமாட்டியின் திருநாமங்களில் ஒன்று (லலிதா. 407). சிவபெருமானது திருவுருவமாக இருப்பவள் என்பது அதன் பொருள். ஆகவே சக்தி தழைக்கும் சிவமும்’ என்று அடுத்தபடி பாடு கிருர் அபிராமிபட்டர். -

- எம்பெருமாட்டியை எண்ணி வழிபடுகிறவர்களில் பல வகை உண்டு. இந்த உலகியலில் தங்கள் வாழ்வு இடையூ றின்றி நிகழவேண்டுமென்று வேண்டுபவர் பலர். தாம் மேற்கொண்ட செயல்கள் இனிது நிறைவேற வேண்டு மென்று தொழுபவர் பலர் தமக்கு வந்த அல்லல்கள் நீங்கவேண்டுமென்று அன்பு செய்பவர் பலர். தேவர்கள் கூடத் தங்கள் பதவிகள் நமக்கு நிலைக்கவேண்டும் என்றே வாழ்த்துகிருர்கள். - * - ,

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்' என்று மாணிக்கவாசகர் பாடுகிரு.ர். - -

- உண்மையான பக்தர்கள் எல்லாவற்றினும் விடுபட்டு இறைவியோடு ஒன்றுபடவேண்டும் எனறு விரும்பு