பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மாலை பூண்ட மலர்

'வெகுவித சொரூபி' 賺° என்றும் திருப்புகழ் கூறுகிறது.

- பல உருவே!

அம்பிகை குணம் குறி கடந்தவள்; நிர்க்குண சொரூபி.

எல்லாவற்றிற்கும் மேலான பரதேவதையாக நிற்கும்

அவள் உபாதி ரகிதமானவள். ஆதலின் ஒன்றே என்றும், பல உருவே என்றும் போற்றிய அபிராமிபட்டர்.

அருவே! -

என்று அடுத்தபடி சொன்னர். நிராகாரா (137) என்பது அன்னையின் திருநாமங்களில் ஒன்று. - -

அப்படி இருந்தாலும் உயிர்களுக்குத் தன்னைப் பற்றிக் கொண்டு கரையேற வழிகாட்டுவதற்காக உருவமும் நாமமும் உடையவளாக வருகிருள். பக்தன் எந்த மூர்த்தி யிடம் தன் உள்ளம் கவிகிறதோ, எந்த வடிவத்தைத் தியானித்தால் உள்ளம் கணிகிறதோ, அந்த வடிவையும் அதைேடு தொடர்பு உடைய திருநாமங்களையும் இடை விடாமல் போற்றுகிருன்; அதனால் இன்பம் பெறுகிருன். இந்தத் தெய்வம் என் தெய்வம்' என்று பெருமிதத்தோடு சொல்கிருன். அவனுடைய உபாசன தெய்வம் அல்லது வழிபடு கடவுளாக அன்னே எழுந்தருளுகிருள்.

அபிராமிபட்டர் தம் வழிபடு க ட வு ளா கி ய அபிராமியை மிகவும் உரிமையோடு,

என் உமையவளே!

என்று கூறி இந்தப் பாட்டை முடிக்கிரு.ர். உலகுயிர்களுக் கெல்லாம் அவள் உரியவளானலும் அன்பின் முதிர்ச்சியால் 5ಾಡ್ತಿ! உரிய பொருளைப் போல எண்ணி இன்புறுவது பக்தியின் நிலைகளில் ஒன்று.

உமா என்ற திருநாமம் தேவி பஞ்சாட்சரம் என்று சொல்லப்பெறுவது.